கலை.....புத்தாயிரமாண்டில் உலகமயமாக்க போக்கிற்கு ஏற்ப அதன் செல்வாக்கினால் சீனாவின் உயர் கல்வி துறையில் பன்னாட்டுத் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு அதிகரித்து வருகின்றது. திறமைசாலிகள் பயிற்சிபெறவும் அறிவியல் ஆராய்சியில் ஈடுபடவும் மேலும் சிறந்த சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
ரா......நீங்கள் சொன்னது பொதுவான நிலைமைதான். நான் அறிந்தவரை நூறு ஆண்டுகால வரலாறுடைய பீ5கிங் பல்கலைக்கழகம் சர்வதேச ஒத்துழைப்பை தனது வளர்ச்சியின் திசையாக கருதியுள்ளது. பாடநூல் மற்றும் கூட்டு ஆராய்ச்சியை நடத்துவதன் மூலம் பீகிங் பல்கலைக்கழகம் எந்தவகையில் பயனடைந்துள்ளது?
கலை......நான் சொல்வதற்கு முன் பீ5கிங்ங் பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு ஒத்துழைப்பு துறையில் பணிபுரிகின்ற திரு சியாஹுன்வே கூறுவதைக் கேளுங்கள்.
பீகிங் பல்கலைக்கழகம் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்ட தொடர்புகளினால் மாபெரும் பயன் கொண்டு வந்துள்ளது. இவற்றில் மிக தெளிவானது புதிய கற்பிக்கும் கண்ணோட்டமாகும். வெளிநாடுகளின் முன்னேறிய பாட நூல்களும் கற்பிக்கும் வழிமுறைகளும் எங்கள் ஆசிரியர்களுக்கு சிறந்த தகவல்களை வழங்கியுள்ளன. அதேவேளையில் உலகில் மிக சிறந்த கல்வி சாதனைகளை உட்புகுத்த எங்களுக்கு உதவி செய்துள்ளன என்றார் அவர்.
ரா........சியாஹுன்வே அவர்கள் சொன்னது உண்மைதான். வெளிநாடுகளின் உயர் கல்வி நிலையங்களுடன் பீகிங் பல்கலைக்கழகம் உற்சாகத்துடன் கூட்டு ஆராய்சியில் ஈடுபட்டுள்ளது. எடுத்துக்காட்டாக 2001ம் ஆண்டில் பீ5கிங்ங் பல்கலைக்கழமும் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும் உயிரின மற்றும் வேளாண் தொழில் நுட்ப ஆராய்ச்சி கூடத்தை நிறுவி ஒன்று சேர்ந்து ஆராய்ச்சி நடத்தியுள்ளன.
கலை........கடந்த 4 ஆண்டுகளில் யேல் பல்கலைக்கழகத்தின் உயிரின வியல் அல்லது மரபியல் பேராசிரியர்கள் அனைவரும் பீகிங் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தனர். கல்வியியல் சிந்தனைகளை பரிமாறி கருத்தரங்கு மூலம் பீகிங் பல்கலைக்கழகத்தின் சக பணியாளர்களுடன் பொது அக்கறை கொண்ட கல்வியியல் பிரச்சினைகளைப் பற்றி ஆராய்ந்துள்ளனர்.
ரா.....இதன் விளைவாக இரு பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களும் மாணவர்களும் எதிரெதிர் தரப்பின் சோதனை அறைகளில் ஆராய்ந்து கூட்டாக சில ஆய்வுரைகளை வெளியிட்டுள்ளனர்.
|