• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-03 19:19:29    
மங்கோலிய இன மக்களின் Tuteng

cri

மங்கோலிய இனம்

வடக்கு சீனாவின் விசாலமான புல்வெளியில் வாழும் மங்கோலிய இனம், ஓநாயை தனது குல விலங்காகக் கொள்கின்றது. மட்டுமின்றி, விலங்கு பற்றிய தொன்மையான மரபுக்கதையும் பரவுகின்றது. பெய்சிங்கில் கல்வி பயிலும் மங்கோலிய இன பெண் Sarina இது பற்றி கூறியதாவது:

"வெகு காலத்துக்கு முன்பே, மங்கோலிய இனம், ஓநாயை மதிக்கத் துவங்கியது. ஓநாயை தனது குல விலங்காக கருதுகிறது. எங்கள் மங்கோலிய இனத்தின் முதலாவது எழுத்து வடிவ வரலாற்று நூலில் பின்வரும் பண்டைய மரபுக் கதை இடம் பெற்றுள்ளது. மங்கோலிய இனமானது, ஓநாய், மான் இரண்டும் இணைந்து உருவான தேசிய இனமாகும். எனவே தங்களை இவ்விரண்டு விலங்குகளின் தலைமுறையினர் என, மங்கோலிய இனத்தவர் கருதுகின்றனர்" என்றார் அவர்.

மங்கோலிய இனம், ஓநாயை விலங்காகக் கொள்ளும் ஒரு பழங்குடி இனமும், மானை, விலங்காகக் கொள்ளும் ஒரு பழங்குடி இனமும் இணைந்து உருவாக்கப்பட்டது என்பதை இம்மரபுக் கதையிலிருந்து அறியலாம். ஒப்பிட்டுப்பார்க்கையில், மானை விட, ஓநாய் வலிமையும் துணிவும் படைத்த விலங்கு. எனவே, மங்கோலிய இனம், ஓநாயை குல விலங்காகக் கொள்கின்றது என்றார்.

சீன சமூக அறிவியல் கழக்கத்தின் பேராசிரியர் He Xing Liang, தேசிய இனவியல் நிபுணர். அவர் பேசுகையில், அதிகமான விலங்குகளில் மங்கோலிய இனம், ஓநாயை குல விலங்காகத் தேர்ந்தெடுப்பதற்கு, தனது வாழ்க்கைச் சூழலும் வாழ்க்கை முறையும் காரணமாகும் என அவர் கருத்து தெரிவித்தார். மங்கோலிய இனம், ஒரு முன்மாதிரியாக விளங்கும் நாடோடி வாழ்க்கை நடத்தும் இனமாகும். விசாலமான புல்வெளியில் எங்கே நீரும் புல்லும் இருக்கின்றதோ அங்கு குடியேறுவார்கள். மாடுகளையும் ஆடுகளையும் மேய்க்கின்றனர். ஓநாய்கள், ஆடுகளைத் திருடி சாப்பிட்டு வருவதினால், மங்கோலிய இனத்துக்கு அவை மிகத் தீங்கு விளைவிக்கின்றன. நீண்டகாலமாக ஓநாய்களுக்கு எதிரான போராட்டத்தில், அவற்றை மேன்மேலும் புரிந்து கொண்டு அதனுடன் நெருங்கி பழகி, இறுதியில், ஓநாயை தமது இனத்தின் அடையாளமாக, குல தெய்வமாகத் தேர்நதெடுத்தனர் என்று அவர் தெரிவித்தார்.

மங்கோலிய இனம், ஓநாயின் நற்குணங்களைக் கற்றுக்கொள்வதில் கவனம் செலுத்தி, அவற்றை சொந்த இனத்தின் எழுச்சியாகப் பயன்படுத்துகின்றது. செல்வி Sarina செய்தியாளருக்குக் கூறியதாவது:

"ஓநாய், துணிவும் விவேகமும் படைத்த விலங்கு. அதன் விடா முயற்சி மற்றும் மன உறுதி காரணமாக, ஓநாய், மிகவும் வலிமையானது என்று மங்கோலிய இனத்தவர் கருதுகின்றனர். இந்த சிறந்த அம்சங்களை கற்றுக்கொண்டால், எங்களுடைய படிப்புக்கும் பணிக்கும் நன்மை ஏற்படும்" என நான் நினைக்கின்னேன்" என்றார் அவர்.