• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-09 10:02:47    
கடந்த வார விளையாட்டுச் செய்திகள்

cri

20வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 26ஆம் நாள் இத்தாலியின் டுரின் நகரில் நிறைவடைந்தன. 17 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் 80க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களின் 2500க்கும் அதிகமான வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொண்டு 84 தங்கப் பதக்க்ஙகளுக்காக போட்டியிட்டனர். சீன அணி இப்போட்டிகளில் 2 தங்கம், 4 வெள்ளி மற்றும் 5 வெண்கலப் பதக்க்ங்களை வென்று, தங்க பதக்க வரிசையில் 14ஆம் இடம் வகிக்கின்றது. 1980ஆம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் முதல் முறையாக கலந்துகொண்டதில் இருந்து சீனா மிக அதிக பதக்கங்களை பெற்றிருப்ப இதுவே முதல் முறை. ஜெர்மன் அணி 11 தங்கப் பதக்கங்களைப் பெற்று, தங்கப் பதக்க வரிசையில் முதலிடம் வகிக்கின்றது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மீது தாம் மிக அதிக நம்பிக்கை கொண்டிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டித் தலைவர் ரோகே பிப்ரவரி 26ஆம் நாள் டுரின் நகரில் கூறினார். டுரின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற நாட்களில் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பு கமிட்டியின் தொடர்புடைய அதிகாரிகள் நுணுக்கமாக பார்வையிட்டு, கற்றுக்கொண்டனர். அவர்கள் அரிய அனுபவங்களைப் பெற்றுக்கொண்டனர் என்றும், இந்த அனுபவங்கள், 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை செவ்வனே நடத்துவதற்கு மிகவும் நல்லது என்றும் ரோகே குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் Johnson&Johnson நிறுவனம் ஒலிம்பிக்கின் உலகளவிலான 12ஆம் ஒத்துழைப்பு கூட்டாளியாக மாறும் என்றும், இந்த நிறுவனத்துடன் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் ஒத்துழைப்பு டுரின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த பின் துவங்கும் என்றும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி பிப்ரவரி 23ஆம் நாள் டுரின் நகரில் அறிவித்தது. முன்னதாக, இந்த நிறுவனம் டுரின் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பொது சுகாதார மற்றும் நலவாழ்வு உற்பத்திப் பொருட்களை வழங்கும் உதவி நிறுவனமாக மாறியது.

2006ஆம் ஆண்டு டோம்ஸ் கோப்பை மற்றும் யூபர் கோப்பைப் பூப்பந்துப் போட்டிக்கான குலுக்கு சீட்டு மூலம் பிரிவுப் பிரிக்கும் நிகழ்ச்சி அண்மையில் டோக்கியோ நகரில் நடைபெற்றது. சீன ஆடவர் அணி, ஜெர்மன் மற்றும இந்திய அணிகளுடன் ஒரே பிரிவில் உள்ளது. சீன மகளிர் அணி, சீனத் தைபெய் மற்றும் அமெரிக்க அணிகளுடன் ஒரே பிரிவில் உள்ளது. பல்வேறு அணிகளின் ஆற்றலை பார்த்தால், சீன ஆண், பெண் அணிகள் குழுப் போட்டிகளில் முதலிடம் பெறுவதில் சிரமம் இருக்காது. இவ்வாண்டின் டோம்ஸ் மற்றும் யூபர் கோப்பை பூப்பந்து போட்டிகள் ஏப்ரல் திங்கள் 28ஆம் நாள் முதல் மே 7ஆம் நாள் வரை ஜப்பானில் நடைபெறும்.