
உலக தொழில்முறை பில்லியர்ட் சுற்றுப் போட்டியின் சீன ஒப்பன் போட்டி மார்ச் 20ஆம் நாள் துவங்கும். கடந்த ஆண்டு எதிர்பாராதவாறு சாம்பியன் பட்டம் பெற்ற சீன இளைஞர் திங் சுன் ஹுய் இந்தப் பட்டத்தை தக்கவைப்பதற்காக நேரடியாக முதல் 32 வலுவான வீரர்களில் சேர்கிறார். உலக வரிசையில் முதலிடம் வகிக்கும் வீரர் GILLIAN O'SULLIVAN உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொள்வார்கள்.
கால் பந்து 2007ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளின் தேர்வுப் போட்டிக்கான E பிரிவின் முதல் சுற்றுப் போட்டி பிப்ரவரி 22ஆம் நாள் துவங்கியது. சீன ஆடவர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் தனது பிரிவில் முதலாவது எதிராளியான பலஸ்தீன அணியைத் தோற்கடித்தது.
கூடைப் பந்து 2005-2006 போட்டிப் பருவ சீன மகளிர் கூடைப் பந்து லீக் போட்டியின் இறுதிப் பந்தயம், பிப்ரவரி 26ஆம் நாள் நிறைவடைந்தது. லியௌ நிங் அணிக்கும் சென்யாங் படைப் பிரிவுக்கும் இடையே நடைபெற்ற மூன்று ஆட்டங்களில் லியௌ நிங் அணி 2-1 என்ற செட் கணக்கில் சென்யாங் படைப் பிரிவு அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.

மேசைப் பந்து குவெய்த் மேசைப் பந்து ஒப்பன் போட்டி பிப்ரவரி 24ஆம் நாள் நிறைவடைந்தது. வழங்கப்பட்ட 4 தங்கப்பதக்கங்களில் சீன அணி மூன்று தங்கப் பதக்கங்களை வென்றது. அவற்றில், சீன வீரர் மாலின் ஆடவர் ஒற்றையர் போட்டியின் சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் தனது சக நாட்டவரான சென் ச்சியுடன் சேர்ந்து விளையாடி, ஆடவர் இரட்டையர் போட்டியின் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார். மகளிர் இரட்டையர் போட்டியில் சீன வீராங்கனைகளான வாங் நான், சாங் யி நிங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஹாங் காங் வீராங்கனை ஜியாங் ஹுவா ச்சுன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
நீச்சல் 2006ஆம் ஆண்டு ஜப்பானிய ஒப்பன் நீச்சல் போட்டி பிப்ரவரி 25,26 நாட்களில் டோக்கியோ நகரில் நடைபெற்றது. சீன வீரர்களும் வீராங்கனைகளும் சிறப்பாக நீச்சலடித்தனர். அவர்கள் மொத்தம் 6 தங்கப் பதக்கங்களையும் 7 வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றனர். பத்து நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பல தலைசிறந்த வீரர்களும் வீராங்கனைகளும் இதில் கலந்துகொண்டனர்.
|