பதினாங்கு ஆண்டுகளுக்கு முன், அவர், சிறிய அளவில் மின்னணு பொருட்களை விற்பனை செய்தவர். இப்பொழுது, ஒரு ஆண்டுக்கு விற்பனை அளவு 200 கோடி யுவானை எட்டும் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் ஆளுனராக மாறியுள்ளார். அவருடைய தொழில் நிறுவனம் தயாரிக்கும் ஏகோ என்ற பல டிஜிடல் உற்பத்தி பொருட்கள், சீனச் சந்தையை ஏகபோகமாக ஆக்கிரமித்துள்ள தென்கொரியா மற்றும் ஜப்பானிய தயாரிப்புக்களைத் தோற்கடித்தது மட்டுமல்ல, சீனாவின் விண்வெளி வீரர்களுடன் வின்வெளிக்கும் சென்றுள்ளன. அவர் தான், ஹுவாச்சி டிஜிடல் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தின் ஆளுனர், பெயர் பொஃன் சூன்.
36 வயதான பொஃன் சூன், உயரமானவர் இல்லை. 1992ம் ஆண்டில் சிங்ஹுவா பல்கலைக்கழகத்தின் சிவில் பொறியாளர் படிப்பு முடித்துக்கொண்ட பிறகு, பெய்ஜிங்கின் ச்சூங் குவான் சுன் அறிவியல் தொழில் நுட்ப வட்டாரத்தில், தமது வணிகக் கடையைத் திறந்தார். துவக்கத்தில் அவருடைய தொழில் நிறுவனம், குறைவான லாபத்துடன் keyboard, mouse, பெட்டி ஆகியவற்றை விற்பனை செய்தது. பணியாளர்கள் குறைவாக இருந்ததால், நாள்தோறும், சரக்குகளை அனுப்பிய பிறகு, பொஃன் சூன் வெளியே சென்று வணிக பேரம் பேச வேண்டியிருந்தது. அவர் கூறியதாவது:
அப்போது மாணவர்களுக்கு, மின்னணு தொழிலில் நல்ல வாய்ப்பு காணப்பட்டது. கணிணியின் வளர்ச்சி, எங்களுக்கு வணிகத்தைத் திறக்கும் வாய்ப்பை தந்ததால், இந்தத் தொழிலில் வணிகத்தைத் துவக்கினோம் என்றார் அவர்.
நன்றாக மக்களிடம் பழகுவது மற்றும் வளைந்து கொடுக்கும் கருத்துக்களால் அவருடைய வணிகம் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. 1993ம் ஆண்டில் அவர், ஹுவாச்சி டிஜிடல் அறிவியல் தொழில் நுட்ப நிறுவனத்தை நிறுவினார். அதன் பிறகு சில ஆண்டுகளில், அதன் விற்பனை தொகையின் அதிகரிப்பு, 60 விழுக்காட்டைத் தாண்டியது. ஆனால், சாதாரணமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் ஈட்டும் தொழில் நிறுவனத்திற்கு, பெரிய அளவில் போட்டி போடும் திறன் இருக்காது, நீடித்த வளர்ச்சியடைய முடியாது என்பதை, பொஃன் சூன் தெளிவாக புரிந்து கொண்டார்.
1999ம் ஆண்டில் இணையம் மற்றும் கணிணியின் வளர்ச்சியுடன், சீனாவின் சந்தைக்கு பல்வேறு டிஜிடல் உற்பத்தி பொருட்களின் தேவை பெருகியது. வாய்ப்பையும், புதிய தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி விரைவான வளர்ச்சி பெறுவது பற்றி, அவர் சிந்தித்தார். திடீரென உணர்வூக்கம் பெற்று, ஏகோ என்ற சின்னத்தை நிறுவினார்.
இச்சின்னமுடைய உற்பத்தி பொருட்களின் ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார். இந்த உற்பத்தி பொருள், அரசுத் துறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக்கூடங்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு, mp3 என்ற இசை ஒலிபரப்பு கருவியின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணியில் பொஃன் சூன் ஈடுபட துவங்கினார்.
சீனாவில், இந்த வகை இசை ஒலிபரப்பு கருவியின் சந்தையை, தென்கொரியா மற்றும் ஜப்பானின் புகழ்பெற்ற தயாரிப்புக்கள் நீண்டகாலமாக ஏகபோகப்படுத்தி வைத்திருந்தன. ஹுவாச்சி ஆராய்ந்து தயாரித்த ஏகோ என்னும் இசை ஒலிபரப்பு கருவி இந்த ஏகபோக நிலைமையை முறியடித்தது. 2004ம் ஆண்டில், அதன் விற்பனை அளவு சீனச்சந்தையில் முதலிடம் பெற்றது.
|