• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-06 19:13:01    
குறுக்குவழி விஞ்ஞானிகள்

cri
விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. ஆனால் பெயரும்புகழும் பெற்றவர்கள் ஏராளம். இந்தப் பெயரும்புகழும் பெற குறுக்குவழியில் முயன்று தோற்ற அல்லது தோற்கடிக்கப்பட்ட விஞ்ஞானிகள் சிலரும் உண்டு. அத்தகைய குறுக்குவழி விஞ்ஞானிகளில் ஒருவர் தான் தென் கொரியாவைச் சேர்ந்த ஹ்வாங் வூ சுக்.

இவர் ஓர் அற்புதமான ஆற்றல் படைத்தவர். குளோனிங் மற்றும் தண்டுத்திசு ஆராய்ச்சியில் வியத்தகு முன்னேற்றம் கண்டிருப்பதாக கடந்த ஆண்டு மேமாதம் கூறி, உலகையே திகைக்க வைத்தார் இவர். 11 நோயாளிகள் தாமாக முன்வந்து கொடுத்த தோல் திசுக்களில் இருந்து கருமுட்டையை குளோனிங் நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்திருப்பதாகவும் பலவகையான நோய்க் கூறு கண்டறிய முடியாத நோய்களைக் குணப்படுத்த உதவக் கூடிய கரு தண்டு செல்களை உருவாக்கி இருப்பதாகவும் ஹ்வாங் வூ சுக் தலைமையிலான விஞ்ஞானிகள் உரிமை கொண்டாடினார்கள்.

ஆனால், ஹ்வாங் பயன்படுத்தியதாக கூறிய வழிமுறைகள் குறித்து நவம்பர் திங்களில் அவருடைய சக விஞ்ஞானிகளில் ஒருவரான அமெரிக்கருக்கு சந்தேகப் பொறிதட்டியது. ஒரு சில வாரங்களிலேயே பல விஞ்ஞானிகள் கேள்விக்கணைகளை விசத் தொடங்கினார்கள். மாட்டிக் கொண்டார் ஹ்வாங் வூ சுக், தமது கண்டுபிடிப்பை திரும்பப் பெறுவதாக கிறிஸ்துமஸ்க்கு முன்பாக அறிவித்தார்.

ஹ்வாங் வூ சுக் போன்ற குறுக்கு வழி விஞ்ஞானிகள் அறிவியல் உலகில் அதிகம் உள்ளனர். அவசரப்பட்டோ, ஆசைப்பட்டோ, தவறான முடிவுகளை அறிவித்து விடுகின்றனர். அறிவியலில் முடிந்த முடிவான முடிவுகள் என்று எதுவும் இல்லை என்பதை இவர்கள் உணர்வதில்லை. முடிவில் தாங்கள் விரித்த வலையிலேயே மாட்டிக்கொண்டு திண்பாடுகின்றனர்.

1988ம் ஆண்டில், அனல் அணு எரியாற்றலை உடனே உருவாக்கக் கூடிய cold fusion எனப்படும் குளிர் இணைப்பு நுட்பத்தை உருவாக்கி விட்டதாக utah என்னும் இடத்தைச் சேர்ந்த இரண்டு அமெரிக்க விஞ்ஞானிகள் மார்தட்டிக் கொண்டனர். வரம்பற்ற மின்சாரத்தை வாரிவழங்கக் கூடிய ஒரு உலையை உருவாக்க வேண்டும் என்பது கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் கனவாக இருந்து வந்தது. ஏனென்றால் இது வரை நடைமுறையில் இருந்த நுட்பத்தின் மூலம் ஒரு விநாடியின் ஒரு சிறுபிரிவு காலத்திற்கு மட்டுமே நிலைக்கக் கூடிய மின்சாரத்தை உருவாக்க முடிகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஒரு ஜாடிக்குள் பல்லாடியம் மற்றும் தண்ணீரின் மூலமாக மின்னோட்டத்தைச் செலுத்தி, நிலையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று utah விஞ்ஞானிகள் கூறினார்கள். இந்த ஆராய்ச்சிக்கு ஏராளமான பணம் வாரி வழங்கப்பட்டது. மற்ற பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் குழுக்களும் தாங்களும் குளிர் பிணைப்பு நுட்பத்தில் முன்னேற்றம் கண்டிருப்பதாகக் கூறிக் கொண்டனர். கடைசியில், பலமாதங்கள் வாதப் பிரதிவாதங்கள் நடந்த பிறகு, இது ஒரு மாயை என்பது நிரூபணமாயிற்று.

அதே காலகட்டத்தில் எச்ஐவி கிருமியைக் கண்டுபிடித்து விட்டதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கூறிய போது, பிரெஞ்சு விஞ்ஞானிகள் முணுமுணுக்கத் தொடங்கினர். பாரிஸில் உள்ள பாஸ்ட்டர் கழகம் அனுப்பிய ஒரு மாதிரியை மட்டுமே அமெரிக்க விஞ்ஞானிகல் கண்டறிந்துள்ளனர். புதிதாக எதையும் கண்டு பிடிக்கவில்லை என்று அவர்கள் வாதிட்டனர். கடைசியில் சர்வதேச தூதாண்மை மூலம் இந்தத் தகராறு தீர்க்கப்பட்டது. ஆனாலும் அமெரிக்க ஆராய்ச்சிக் கூடத்தில் பின்பற்றப்படும் நுட்பங்கள் கேலிக்கூத்தாகிவிட்டன.

அறிவியல் பாடத்தில் periodic ratle என்றொரு வாய்ப்பாடு இருப்பதை நமது அறிவியல் மாணவர்களும் ஆசிரியர்களும் அறிவார்கள். இதில் ஒவ்வொரு மூலகங்களுக்கும் ஒரு குறிப்பெயரும், வாய்ப்பாடும் உண்டு. 1999ம் ஆண்டில் அமெரிக்காவின் பிரபல ஆராய்ச்சிக் கூடத்தின் விஞ்ஞானிகள், 116 மற்றும் 118 மூலகங்களைக் கண்டு பிடித்திருப்பதாகக் கூறினார்கள். இவை சூப்பர் கனமான, நிலையற்ற பொருட்கள் என்றும், ஒரு விநாமியில் ஒரு சிறுபிரிவு நேரமே இவை நிலைத்திருக்கும் என்றும் கூறினார்கள். இந்தக் கண்டுபிடிப்பை எல்லோரும் ஆகா, ஓகோ என்று புகழ்ந்தார்கள். அப்புறம் சந்தேகப் பொறி தட்டியது. கடைசியில் 2002ம் ஆண்டில் இந்தக் கண்டுபிடிப்பு திரும்பப் பெறப்பட்டது. அறிவியல் புத்தகங்களை திருத்தி எழுதியதற்காக ஒரு இயற்பியல் விஞ்ஞானி நீக்கப்பட்டார்.

சில அறிவியல் வெளியீடுகள் ஆராய்ச்சியாளர்களைப் பல ஆண்டுகளுக்குத் திசை திருப்பி விடுகின்றன. ஸிரில் பர்ட் என்ற பிரிட்டிஷ் உளவியல் அறிஞர் இத்தகைய சந்தேகத்திற்குரிய தகவல்களை வைத்து, IQ எனப்படும் அறிவுசால் ஆற்றல் மரபுவழி வருவது என்று நிரூபித்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் விஞ்ஞானப்போர் நடந்த பிறகு, தமது ஆராய்ச்சியை மூட்டைகட்டிவைத்தார். ரஷியாவின் டிரோஃபிம் லைசெங்கோ என்ற உயிரியல் அறிஞர் சோவியத் வேளாண் உலகில் சுமார் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னராகத் திகழ்ந்தார். ஆனால் அவருடைய ஆராய்ச்சிகளை அவசரக் குடுக்கை என்று மற்ற பகுதி விஞ்ஞானிகள் பொய்ப்பித்து விட்டனர். 1971 இல் பிலிப்பீன்ஸில் ஒரு அரசாங்க நிபுணர், இக்கால நாகரிகத்தின் பார்வையில் படாமல் இருக்கிற கற்கால நாகரிகம் ஒன்றைக் கண்டு பிடித்திருப்பதாக கூறி, அந்த இனத்துக்கு TASADAY என்று பெயரும் இட்டார். ஆனால், இந்தக் கண்டுபிடிப்பு போலி என்பதை நிரூபிக்க 12 ஆண்டுகள் ஆயின. அதற்குள், அந்த விஞ்ஞானி, பல லட்சக்கணக்கான டாலர்களை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார்.

அறிவியல் என்பது ஒரு ஜனநாயகம் போன்றது. ஆரோக்கியமான அறிவு சார்ந்த சூழவில், தவறுகள் திருத்தப்படுகிறன. போலிகளின் முகமூடி கிழிக்கப்படுகின்றன. ஏனென்றால், எந்த ஒரு அறிவியல் பரிசோதனையும் திரும்பச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது விதி. இந்த விதியின் பார்வையில் இருந்து போலிகள் தப்பமுடிவதில்லை.