• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-06 20:51:26    
பல்வேறு நாடுகளில் காணப்படும் பல்வகை நடனங்கள்

cri

திருமண நடனம்

ஆப்பிரிக்காவின் லிபியாவில் பெண்டு இன மக்களின் பெண்கள் திருமண நடனம் ஆட கற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், திருமணம் செய்வதற்கு அனுமதி கிடைக்காது. இத்தகைய நடனம் ஆட கற்றுக்கொள்ளும் போது, ஒதுக்குப்புறமான இடங்களில் மற்றவருக்கு தெரியாமல் பயில் வேண்டும். ஏனெனில் மற்றவர்கள் பார்த்து விட்டால் அது மங்கலச் செயல் அல்ல என்று பொதுவாக கருதப்படுகிறது.

காதல் கேட்கும் நடனம்

பசிபிக் தீவுகளில் அமைந்துள்ள சில பழங்குடி இனத்தவர்களிடையில் இத்தகைய நடனம் பரவி வருகிறது. இளம் பழங்குடி மரபு தலைவர் காதல் கேட்கும் போதெல்லாம், முதலில் ஒரு பெண்கள் குழு ஆட துவங்குவர். பின் அத்தலைவர் திடீரென அங்கு வந்து ஆடத் துவங்குவார். இவர்களிடையில் அத்தலைவர் வண்ணக் கம்பளத்தைப் போர்த்திக் கொண்டவாறு நடனம் ஆடி, இறுதியில் ஒரு எழில் மிக்க பெண்ணைத் தேர்ந்தெடுத்து விடுவார். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பயப்படாமல் அவருடன் ஆடுவார். இறுதியில் தலைவர் தலையில் விரித்த அந்த வண்ணக் கம்பளத்தில் நிறைக்குடத்துடன் முழந்தாளிட்டு சம்மதத்தைக் காட்டுவார். அத்தலைவர் குடத்திலுள்ள நீரை வயிறு நிறைய குடித்துவிடுவார்.

கணவரை நினைவுப்படுத்தும் நடனம்

அமெரி்க்காவின் கலிபோனியா மாநிலத்தின் வடப்பகுதி மலைப் பிரதேசத்தில் வாழும் இந்தியன் பழங்குடி பெண்களிடையே இத்தகைய நடனம் பரவி வருகிறது. அவர்களுடைய கணவன்மார்கள் வெளியே வேட்டையாட செல்லும் போது, அல்லது வெளியூருக்குச் செல்லும் போது, இவர்கள் அடிக்கடி உணவும் ஹக்கமும் இல்லாமல் இரவும் பகலுமாக நடனம் ஆடுவார்கள். இவ்வாறு செய்வதன் மூலம், கணவரின் களைப்பை நீக்கி அவரின் பாதுகாப்பை நிலைநாட்ட முடியும் என்று அவர்கள் நம்புவார்கள்.

சூரிய நடனம்

தென் அமெரிக்காவிலுள்ள இங்கா இனத்தவர் சூரியனை தமது மூதாதையர் என கருதுவதுண்டு. அவர்கள் சூரிய வழிபாடு செய்வதுடன் ஆண்டுதோறும் கோடைகாலத்தில் பிரமாண்டமான சூரிய நடன விழாவையும் நடத்துவர். முதன்முதலாக அவர்கள் கம்பங்களால் ஒரு வட்ட வடிவை உருவாக்கி, அதன் நடுவில் தோல் துண்டுகள் மற்றும் பறவை இறகுகளால் போர்த்தப்படும் சூரிய தூணை நிறுத்தி வைப்பார்கள். அதன் கீழ் காட்டு மாடுகளின் மம்டை ஓடுகளால் படையல் மேடையை உருவாக்குவார்கள். நடனம் ஆடும் போது அவர்கள் இதை நோக்கி பார்த்த வண்ணம் ஆடுவார்கள்.

பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிபுள்ள அன்பளிப்பைத் துப்பும் திமிங்கலம்

ஆஸ்திரேலியாவின் கடற்கையில் ஒரு ஜோடி மீனவர் தம்பதி ஒரு நாள் மணலில் பசை போன்ற துர் நாற்றம் வீசிய ஒரு துண்டு சளிப்பொருளைக் கண்டறிந்தனர். இது ஒரு வகை திமிங்கலம் துப்பிய பொருளாகும் என்று அறிவியலாளர்கள் அவர்களிடம் கூறினார்கள். இது உலகில் தரமிக்க நறுமண பொருளுமாகும். அதன் விலை தங்கத்தை விட அதிகம். இந்த மீனவர்கள் பொறுக்கி எடுத்த இந்தச் சளிப்பொருளை 10 லட்சம் அமெரிக்க டாலருக்கு விற்க முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்.