• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-07 12:27:25    
சீன முறை மருத்துவ மனை

cri
பெய்சிங் நகரில் 30 வயது பெண் வான் சுறுசுறுப்பானவர். ஒரு நாள் திடீரென முதுகில் பயங்கரமான வலி. மருத்துவ மனைக்குப் போய் 3 நாட்கள் தங்கி சிகிச்சை எடுத்தார். வீக்கம் வற்றும் மருந்து கொடுத்தார்கள். உடல் இயக்கப் பயிற்சி செய்யச் சொன்னார்கள். 10 ஆயிரம் யுவான் செலவழித்தது தான் மிச்சம். முதுகு வலி குறையவில்லை.

அப்போது ச்சாவோ என்லாங் என்ற மருத்துவரைப் பற்றி யாரோ சொன்னார்கள். அவருடைய சீன முறை மருத்துவ மனையான MIDDLEWAY CHINESE CLINICகிற்கு சென்றார். 73 வயதான அந்த மருத்துவர். தமது உள்ளங் கையால் அந்தப் பெண்ணின் முதுகைத் தடவிப் பார்த்தார். உடனே முதுகுத் தண்டில் ஒரு சிறு எலும்பு மூட்டு பிசகியிருக்கின்றது என்று சொன்னார். மற்ற மருத்துவ மனைகளில் எலும்பு வீக்கம் என்று கூறி பயமுறுத்தியிருந்தனர். மருத்துவர் ச்சாவோ அந்தப் பெண்ணிடம் ஆழமாக மூச்சை உள்ளே இழுத்துப் பிடிக்குமாறு கூறிவிட்டு அவளுடைய முதுகில் கையை வைத்தார். மூச்சை வெளியே விடும்படி சொன்னார். தனது உள்ளங்கையால் அவருடைய முதுகை அழுத்தினார். மருத்துவர் ச்சாவோ தனது முதுகைத் தடவிய போது மட்டும் வாங்கிற்கு லேசாக வலித்தது. உள்ளங்கையால் அழுத்திய போது வலிக்கவில்லை. அவ்வளவு தான் ஒரு நிமிடத்திற்குள் சிகிச்சை முடிந்தது. "வீட்டுக்கு போங்கம்மா"என்று வழியனுப்பி வைத்தார். 3 வாரங்களாக வாட்டி வதைத்த முதுகு வலி முப்பதே நிமிடங்களில் குணமாகிவிட்டது.

இந்த அதிசய சிகிச்சை அளித்த 73 வயது முதியவரான மருத்துவர் ச்சாவோ முன்பு சண்டைக்கலை மாஸ்டராகப் பணியாற்றியவர். இவர் விலகிய எலும்புகளை நேர்ப்படுத்தி விடுகிறார். SLIPPED DISC எனப்படும் இடுப்பு எலும்பு நழுவல் நோய்க்கு எலும்புகளை உரிய இடத்தில் வைக்கிறார். ஆனால் அதனுடன் தொடர்புடைய ரத்த நாளங்களையும் நரம்புகளையும் சரிசெய்ய வேறு சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளது. இவர் திங்கட்கிழமை மட்டும் அதுவும் ஒரு மணி நேரத்திற்கு மட்டுமே சிகிச்சை அளிக்கிறார்.

 

 

சீன மருத்தவத்தில் கீழ்வாத நோய்க்கு ஒரு விநோதமான சிகிச்சை அளிக்கிறார்கள். அதற்கு ஆங்கிலத்தில் MOXIBUSTION என்று பெயர். அதாவது கார்பன் சேர்க்கப்பட்ட மூலிகைத் தண்டு ஒன்று எரிக்கப்பட்டு அது முதுகில் வலி உள்ள இடத்தில் வைக்கப்படுகின்றது. அல்லது வலி உள்ள இடத்தோடு சேர்த்துக் கட்டப்படுகின்றது. இந்த சிகிச்சை செய்ய நீண்ட நேரம் ஆகும். ஆனால் மலிவானது.

செரிமானத்தைத் தூண்டும் புளிச்சக் கீரை

புளிச்சக் கீரையை உண்பவர்களுக்கு இருமல், காசம், சொறி, சிரங்கு, கால் கை வீக்கம், எலும்பைப் பற்றிய சுரம், போன்ற நோய்கள் வராது. புளிச்சக் கீரை தேகசித்தி எனப்படும் காயகல்ப தன்மையையும் இளமையைக் கட்டிக் காக்கும் குணத்தையும் உடலுக்கு அளிக்கின்றது. இதனை சட்னி செய்து பகல் உணவில் நெய்யுடன் பிசைந்து உண்ணலாம். புளிப்பும் விறுவிறுப்புச் சுவையும் கடுமையான எண்ணெய் பலகாரங்களுடன் இச்சட்டினி மூலம் செரித்து விடுவதால் ஆந்திர மக்களின் முதல் உணவே இந்த கோங்குரா சட்னி எனப்படும் புளிச்சக் கீரை சட்டினிதான்.

கோடைக் காலத்தில் உண்ண வேண்டிய கீரைகள்

வெந்தியக் கீரை மணித்தக்காளி கீரை முளைக் கீரை பசளைக் கீரை கீழாநெல்லி கீரை, கரிசலாங்கண்ணி கீரை, சக்கரவர்த்திக் கீரை, வல்லாரைக் கீரை, ஆராக்கீரை, அகத்திக் கீரை இவற்றைக் கூடியவரை பிப்ரவர் முதல் ஆகஸ்ட் வரை சாப்பிடலாம். செப்டம்பர் முதல் ஜனவரி வரை தவிர்ப்பது நல்லது.