வணக்கம்!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மிக மகிழ்ச்சி.
கடந்த முறை, ஒரு உரையாடலைப் படித்துள்ளோம். பாடத்துக்குப் பின் நீங்கள் பயிர்சி செய்தீர்களா?கிரகித்துக்கொண்டீர்களா? இப்பொழுது, இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை பார்க்கின்றோம்.
இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற பாடநூலின் 25வது பக்கத்தின் மேல் பகுதியில் உள்ளது.
முதலில் இந்த உரையாடலை ஒரு முறை பாருங்கள்.
WO WAN DAO YI HUI ER XING BU XING?
XING。
இந்த உரையாடலின் தமிழாக்கம் வருமாறு,
WO WAN DAO YI HUI ER XING BU XING?
நான் சற்று தாமதமாக வர நேரிடலாம், பரவாயில்லையா?
XING。
பரவாயில்லை.
இப்பொழுது ஒரு புதிய உரையாடலைப் படிக்கின்றோம்.
இந்த உரையாடல் தமிழ் மூலம் சீனம் என்ற நூலின் 25வது பக்கத்தின் கீழ் பகுதியில் உள்ளது.
முதலில் இந்த உரையாடலை ஒரு முறை கேளுங்கள்.
WO ZUO ZHE ER, KE YI BU KE YI?
KE YI。
இப்பொழுது இந்த உரையாடலின் தமிழாக்கத்தை தருகின்றோம்.
WO ZUO ZHE ER, KE YI BU KE YI?
நான் இங்கே உட்காரலாமா?
KE YI。
சரி, உட்காரலாம்.
இந்த உரையாடலை இப்பொழுது விளக்கிக் கூறுகின்றோம்.
WO ZUO ZHE ER, KE YI BU KE YI?என்ற வாக்கியத்திலுள்ள WO என்றால் நான் என்பது பொருள், ZUO என்றால் உட்காருவது என்பது பொருள், KE YI என்றால் முடியும் என்பது பொருள், BU KE YI என்றால் முடியாது என்பது பொருள், KE YI BU KE YI? என்றால் ஒரு வினா வாக்கியமாகும். முடியுமா, இல்லையா? அல்லது முடியுமா, முடியாதா?என்று பொருளாகும். பதிலளிக்கும் போது, KE YI என்று சொல்லலாம், BU KE YI என்றும் பதிலளிக்கலாம். தமிழ் மொழியிலே, சரி முடியும், அல்லது முடியாது என்று சொல்லலாம்.
இன்று நாம் இன்னொரு புதிய உரையாடலைப் படித்துள்ளோம். பாடத்துக்குப் பின் நன்றாக பயிற்சி செய்யுங்கள். இத்துடன் இன்றைய பாடத்தை முடித்துக்கொண்டு விடைபெறுகின்றோம்.
|