 எவ்வளவு விநோதமான விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன—கடற்கரையில வானவில் நிறத்துல சோழிகள். பயங்கரமான வரலாறு உள்ள தர்பூசணி. எனக்குத் தெரிஞ்சது எல்லாம் காய்கறிக்காரன் விக்கிற தர்பூசணி மட்டும்தான்.
"நம்ம கடற்கரையில், அலை உள் வாங்கும் போது துள்ளிக் குதிக்கிற மீன்கள் நிறைய வரும். தவளை போலவே ரெண்டு கால்களால குதிக்கும்."
ஜுன்ட்டுவின் மனம் இவ்வளவு அரிய விஷயங்கள் அடங்கிய பொக்கிஷமாக இருக்கிறது. என்னுடைய பழைய நண்பர்கள் புத்தியில இதெல்லாம் படாது. அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. ஜுன்ட்டு கடலோடேயே வாழ்ந்துக்கிட்டு இருக்கான். அவங்களுக்கோ என்னைப் போல உயரமான முற்றத்துச் சுவருக்கு மேலே ஆகாயத்தின் நாலு மூலைகள்தான் தெரியும்.
என்னுடைய கெட்டகாலம், புத்தாண்டு பிறந்த ஒரு மாதத்தில் ஜுன்ட்டு அவனுடைய ஊருக்குப் போக வேண்டியிருந்தது. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அவனும் சமையலறைக்குள் போய் இருந்து கொண்டு, வெளியே வர மறுத்துக் கதறினான். கடைசியில் அவனுடைய அப்பன் அவனைத் தூக்கிக் கொண்டு போனான். சில நாட்கள் கழித்து சோழிகளையும், சில அழகான இறகுகளையும் கொடுத்தனுப்பினான் நானும் ஓரிரு தடவை சில அன்பளிப்புக்களை அனுப்பினேன். அதன் பிறகு நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை.
இப்போது எனது அம்மா பேச்சை எடுத்ததும், குழந்தைப் பருவ நினைவுகள் பளீரென மின்னின. அழகான எனது பழைய வீட்டைப் பார்த்தது போல் இருந்தது.
"அப்படியா? இப்போ அவன் எங்கேருக்கான்?" என்று கேட்டேன்.
"அவனா? அவனும் ஒண்ணும் ரொம்ப சிறப்பா இல்லே" என்று சொன்ன அம்மா, கதவைப் பார்த்தபடியே, "இதோ, பழையபடி அதே ஆளுங்க வந்துட்டாங்க. நம்ம பர்னிச்சர்களை வாங்கணும்னு சொல்றாங்க. ஆனா எதைத் தூக்கிட்டுப் போயிறலாம்னு நினைக்கிறாங்க. நான் போய் கவனமா கவனிக்கணும்" என்று கூறியபடியே அம்மா எழுந்து சென்று விட்டாள். வெளியே பல பெண்களின் குரல்கள் கேட்டன. நான் ஹுங் அர்ருடன் பேசத் தொடங்கினேன்.
அழைத்து, "எழுதத்தெரியுமா" என்று கேட்டேன். புறப்படுவது மகிழ்ச்சிதானே என்றேன்.
"ரயிலுல போகப் போறமா?"
"ஆமா, ரயிலுலதான்!"
"படகில?"
"மொதல்ல படகுல போவோம்"
"ஓ! இவ்வளவு நீளமான மீசையோடா?" திடீரென ஒரு குரல் கிறீச்சிட்டது.
|