• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-09 13:50:03    
சிங்ஹைய்-திபெத் பீடபூமியின் முத்து—சிங்ஹைய் ஏரி

cri

உலகின் கூரை என்று அழைக்கப்படும் சீனாவின் சிங்ஹைய்-திபெத் பீடபூமியின் வட கிழக்கு பகுதியில், 4500 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள சிங்ஹைய் ஏரி உள்ளது. இந்த விசாலமான ஏரி மாயமானது. பண்டைக்காலம் தொட்டு, மக்களின் கவனத்தை ஈர்க்கும் காட்சித் தலமாக விளங்கிவருகின்றது. சிங்ஹைய் ஏரிக்குத் தனிச்சிறப்பான கவர்ச்சி உண்டு. இது தவிர, இப்பகுதியின் வித்தியாசமான தேசிய இனப் பழக்க வழக்கங்களும் மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்துவருகின்றன. எமது செய்தியாளர் வட மேற்கு சீனாவின் சிங்ஹைய் மாநிலத்தின் தலைநகரான சீநின்னிலிருந்து புறப்பட்டு, மேற்கு நோக்கிச் சென்ற போது, வழியில் மலைத்தொடர்களும் மேய்ச்சல் காட்டில் விளையாடிக்கொண்டிருந்த ஆடு-மாடுகளும் காணப்பட்டன. சுமார் 150 கிலோமீட்டர் தூரம் சென்ற பின், தொலைவில் இளம் நீல நிறத்தில் வானமும் நீரும் தொட்டுக்கொண்டிருக்கும் ஒரு காட்சி தென்பட்டது. சிங்ஹைய் ஏரிக் கரைக்கு அருகில் நெருங்க நெருங்க இந்த ஏரியின் நிறம் கரு நீல நிறமாகக் காணப்பட்டது.

விசாலமான நீர்ப்பரப்புக்கு எல்லையில்லை என்பது போல தோன்றியது. இதுவே சிங்ஹைய்-திபெத் பீடபூமியில் முத்து எனப்படும் சிங்ஹை ஏரி. எமது செய்தியாளர் இந்த ஏரியின் தென் கரையில் அமைந்துள்ள ஹைய்னான்-திபெத் இனத் தன்னாட்சிப் பகுதியின் கொங்ஹொ மாவட்டத்தைச் சென்றடைந்த போது, இம்மாவட்டத்தின் சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் லீ யுவான் லின், சிங்ஹைய் ஏரியின் தோற்றம் பற்றி கூறினார். சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன், சிங்ஹைய்-திபெத் பீடபூமி ஒரு கடலாக இருந்தது. தீவிரமான மலையின் பெயர்ச்சியினால் கடலின் அடி மட்டம் படிப்படியாக மேலோங்கிவளர்ந்ததால், கடல் நீர் மலையால் சூழப்பட்டு, பல சிறிய, பெரிய ஏரிகள் உருவாயின. சிங்ஹைய் ஏரி அவற்றில் ஒன்று என்றார் லீ யுவாலின். சிங்ஹைய் ஏரியின் அழகான காட்சியைப் பயணிகள் நன்கு கண்டுகளிக்கத் துணை புரியும் பொருட்டு, இம்மாவட்டத்தில் மொத்தம் 10 சுற்றுலாக் கப்பல்கள் இயக்கப்படுகின்றன. லீ யுவான்லின் மேலும் கூறியதாவது, கப்பலில் ஏறி இந்த ஏரியில் கண்டுகளிக்கக் கூடிய முக்கிய காட்சித் தலங்கள் இரண்டு. ஒன்று, பறவைத் தீவு. சீனாவில் இடம்பெயரும் பறவைகள் குழுமியிருக்கும் இடம் இது.

பறவைகளின் வகையும் அதிகம். 40க்கும் அதிகமான பறவை வகைகள் இங்கு வருகின்றன. மற்றொரு இடம், ஹைசின் மலை. இவ்விடம், மதச் சுற்றுலாத் தலம். அதற்கு நீண்ட வரலாறு உண்டு என்றார். கப்பலில் செல்லும் பயணிகள் தொலைவில் பார்க்கும் போது, விசாலமான ஆகாயம் சிங்ஹைய் ஏரி நீரைத் தொட்டுக்கொண்டிருப்பது போல் தெரியும். வெளிச்சத்தில் நீல நிறமுடைய ஏரி நீர், பளிங்கு போல இருக்கின்றது. சீனாவின் உள் வட்டாரத்திலுள்ள ஏரிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், சிங்ஹைய் ஏரி மேலும் விசாலமாக உள்ளது. இதனால், கப்பல் இந்த ஏரியின் மேல் செல்லும் போது, தாம் கடல் மட்டத்திலிருந்து 3200 மீட்டர் உயரத்தில் தாங்கள் இருப்பதைப் பயணிகள் சில வேளையில் மறந்துவிடுவார்கள். பறவைத் தீவு, சிங்ஹைய் ஏரியின் மற்றொரு அற்புதம் என்று கூறலாம். அது, இந்த ஏரியின் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. அதன் பரப்பளவு 0.8 சதுரக்கிலோமீட்டர். ஒவ்வொரு ஆண்டின் வசந்த காலத்திலும் இடம்பெயரும் பறவைகள், கூட்டம் கூட்டமாகத் தென் சீனா மற்றும் தென்கிழக்காசியாவிலிருந்து இங்கு வருவது வழக்கம்.

அப்போது, பறவைத் தீவு பரபரப்பான உலகமாக மாறிவிடும். பறவைத் தீவில் ஒன்றுசேர்ந்த பல லட்சம் பறவைகள் காலை முதல் இரவு வரை மும்முரமாகப் புல்களையும் கிளைகளையும் கௌவிக்கொண்டு புதிய கூடுகளைக் கட்டும். ஜுன், ஜூலை திங்களில், பறவைக் குஞ்சுகளின் சிறகு அடர்த்தியாக வளரும் போது, உணவைத் தேடி, அவற்றின் பெற்றோர் அவற்றைக் கூட்டிக்கொண்டு எங்கெங்கும் பறந்துசெல்லும். அவை வானில் பறக்கும் அல்லது ஏரி நீரில் விளையாடும் அல்லது மணல் கடற்கரையில் தங்கியிருக்கும் போது இந்தப் பறவைத் தீவு முழுவதும் பறவைகளின் நாடாக மாறிவிடும். சிங்காய் ஏரியின் கரையிலிருந்து பார்த்தால், பசுமையான மலைத்தொடர், தெளிந்த நீர், உறைபனி, மலையின் நிழல் ஆகியவை தென்படுகின்றன. ஏரியின் சுற்றுப்புறத்தில் நீரும் புல்லும் நிறைந்து, இயற்கையான மேய்ச்சல் தளமாகின்றது. கோடைக்காலத்தில் வெளியில், பொன்னிற எண்ணெய் வித்துச்செடி மலர் நறு மணம் வீசுகின்றது. ஏரியின் கரையில் ஆயர்களின் கூடாரங்கள் உள்ளன. சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் ஏரிக்கரையின் காட்சி மேலும் அழகானது. இந்த எழில் மிக்க சிங்காய் ஏரியில் தான் பறவைத் தீவு அமைந்துள்ளது.