
Ewenki இனம்
வடக்கு சீனாவின் சிறுபான்மை தேசிய இனங்களில், மங்கோலிய இனம் மட்டுமல்ல, வேறு சில இனங்களும் ஓநாய் மீது மதிப்பு கொண்டுள்ளன. வடமேற்கு சீனாவில் வாழும் விகுர் இனத்தவர், குழந்தை பிறந்ததும் அதை "சிறிய ஓநாய்" என அன்பாக அழைக்கின்றனர். இவ்வினங்களில் பரவும் மரபுக் கதைகளில், அவர்கள் அனைவரும், ஓநாயின் தலைமுறையினர்களாவர்.

Xun Lu எனும் ஒருவகை மான்
ஓநாய் தவிர, கரடி, மான், அன்னப்பறவை முதலிய விலங்குகளும் வடக்குபகுதியில் வாழும் சிறுபான்மை தேசிய இன மக்களின் மதிப்பு பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, வட கிழக்கு சீனாவில் வாழும் மஞ்சு இனம், அன்னப்பறவை, ஷிஜ எனும் ஒருவகை புறா உள்ளிட்ட பறவைகளை தத்தம் இனங்களின் அடையாளமாகக் கொள்கின்றன. Da Xing An Ling காடுகளில் வாழும் Ewenki இனம், Xun Lu எனும் ஒருவகை மானை தேர்ந்தெடுக்கின்றனர். பல்வேறு தேசிய இனங்களின் வாழ்க்கைச் சூழலுடன் இது நெருக்கமான தொடர்புடையது.
இருப்பினரும், காலப்போக்கில், விலங்கை தேசிய இனத்தின் அடையாளமாக பயன்படுத்துவது என்பது பண்டைய பண்பாட்டின் வெளிப்பாடாகும். இது நவீன சமூகத்தில் மக்களால் மறக்கப்படும் நிலையில் உள்ளது. மக்கள் இதை அவ்வளவாக புரிந்து கொள்ள இல்லை. இப்புதினம் சீனாவில் பரவுவதினால், இது மக்களின் நினைவில் வருகின்றது.
Zhang Ming என்பவர், ஒரு கூட்டு நிறுவனத்தின் பணியாளர். சீனாவின் மத்திய பகுதியில் வாழும் ஹான் இனத்தவராவார். சிறுபான்மை தேசிய இனத்தின் வளர்ச்சிக்கும் விலங்குகளுக்குமிடையே உள்ள உறவை மீண்டும் புரிந்து கொள்ள இப்புதினம் தமக்கு துணையாயிருப்பதாக, செய்தியாளருக்கு அவர் தெரிவித்தார்.
"இப்புதினம், கடந்த சில ஆண்டுகளில் நான் படித்த புதினங்களில் சிறந்த ஒன்றாகும். இதன் மூலம் புல்வெளியில் வாழும் ஓநாயின் இயல்பை மீண்டும் புரிந்து கொண்டுள்ள அதே வேளையில், மனித குலத்தையும் மீண்டும் அறிந்து கொண்டுள்ளேன். புல்வெளியில் ஓநாய் தான், மங்கோலிய இன மக்களை துணிவடையச் செய்துள்ளதாக நான் அறிந்து கொண்டேன்" என்றார்.
ஒருவகை விலங்கை, சொந்த இனத்தின் அடையாளமாகக் கொள்வதென்ற பண்டைக்கால பண்பாடு, சீனாவின் வேறுபட்ட தேசிய இனங்களுக்கிடையே பண்பாட்டுப் பரிமாற்றம் மேலும் வலுப்பட்டு வருவதை காட்டுகின்றது.
|