• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-09 14:27:15    
நேயர்களின் கருத்துக்கள்

cri

புதுவை பெரிய காலாப்பட்டு நேயர் பி. சந்திரசேகரன், அறிவியல் உலகம் நிகழ்ச்சி கேட்ட போது மனிதன் எவ்வாறு உருவானான் என்ற சிந்தனை ஏற்பட்டதாக க் கூறுகிறார். இவ்வளவு விந்தையான தன்மைகளை வைத்து மனிதனை உருவாக்கியது யார்? என்ற கேள்வி எழுப்புகிறார். திருச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரம் நேயர் டி ஆனந்த், சீன ஒலிபரப்பை இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.

மேலும், நிகழ்ச்சிகளை ஒவ்வொரு மாதமும் புத்தகமாக வெளியிடலாம் என்கிறார். மதுரை மாவட்டம் ஜராவத நல்லூர் எஸ். பாண்டியராஜன், சீன உணவு அரங்கில் தேங்காய் கலந்த இனிப்பு பற்றி கூறப்பட்டது. செய்முறை அரும். நடைமுறை கடுமை என்று குறிப்பிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வேப்பங்காடு கிராமத்தைச் சேந்த வி,ஆர். ரவிச்சந்திரன் தற்போது 4,5 மாதங்களாக சீனாவின் குவாங்சோ நகரில் இருக்கிறார். இவர் தமது 11வது வயதில் இருந்தே பல வானொலிகளின் நிகழ்ச்சிகளைக் கேட்டு எழுதியதாகவும், சீன வானொலிக்கு, ஒன்றிரண்டு கடிதங்கள் எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டு, விரிவான கடிதம் வான் அஞ்சலில் அனுப்பியுள்ளார்.

இப்போது இணையதளம் மூலம் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பை தினமும் கேட்பதாகவும், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி தமக்கு பெரிதும் உதவியாக இருக்கிறது என்றும் கூறுகிறார். இனி தொடர்ந்து விமர்சனக் கடிதங்கள் எழுதுவதாகக் கூறுகின்றார். மேலும், கையெழுத்து பற்றி ஒரு நிகழ்ச்சியில் ராஜாராம் சொன்னார். கையெழுத்தை வைத்து ஒருவரின் தலையெழுத்தை சொல்ல முடியாவிட்டாலும், அவரின் மனநிலையை நிச்சயமாகச் சொல்ல முடியும் என்கிறார்.

இனி, மின்னஞ்சல்கள்.

மின்னஞ்சல்களில் முதலில் சென்னையில் இருந்து சேகர் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி சுவையாக இருந்தது என்று பாராட்டியுள்ளார். சீனாவில் தமிழ் கற்கும் மாணவர்களின் திறமையும் ஊன முற்றவர்களின் இசை நிகழ்ச்சியும் தம்மை வியக்க வைத்தது என்கிறார். மதுரை செல்லூர் நா. சீனிவாசன் இஸ்ரேலி தலைமை அமைச்சர் ஏரியல் ஷாரோன் உடல் நிலை பற்றி மற்ற தமிழ் ஒலிபரப்புக்கள் ஒலிபரப்பிலய செய்திக்கும், சீன வானொலியின் தெளிவான செய்திக்கும் இடையே வித்தியாசம் இருந்தது. சீன வானொலியின் இடத்தை உலகின் எந்த வானொலியும் பூர்த்தி செய்ய முடியாது என்று பாராட்டிவிட்டு, இந்த ஆண்டின் முதலாவது நேயர் நேரும் நிகழ்ச்சி தரமாக இருந்தது என்று பாராட்டியுள்ளார். டிசம்பர் திங்கள் 30 அன்று ஒலிப்பான வேலுசாமியின் பேட்டி நன்றாக இருந்தது என்று பாராட்டி மின்னஞ்சல் அனுப்பியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு பாவேந்தர் நேயர் மன்ற உறுப்பினர்கள். ஜனவரி 20 நமது நோயர்களான க. பழனிச்சாமி- ஆ.ராஜேஸ்வரி திருமண வரவேற்பு விழா என்று மின்னஞ்சல் அழைப்பு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சி ஊத்துக்குனியில் நடைபெறுகிறது.