• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-16 12:52:25    
எழில் மிக்க சிங்ஹைய் ஏரி

cri

சிங்ஹைய் ஏரிக்குத் தனிச்சிறப்பான கவர்ச்சி உண்டு. இது தவிர, இப்பகுதியின் வித்தியாசமான தேசிய இனப் பழக்க வழக்கங்களும் மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்துவருகின்றன. சிங்காய் ஏரியின் கரையிலிருந்து பார்த்தால், பசுமையான மலைத்தொடர், தெளிந்த நீர், உறைபனி, மலையின் நிழல் ஆகியவை தென்படுகின்றன. ஏரியின் சுற்றுப்புறத்தில் நீரும் புல்லும் நிறைந்து, இயற்கையான மேய்ச்சல் தளமாகின்றது. இந்ச அழதான சிங்காய் ஏரியில் பறவை தீவு உள்ளது. இத்தீவில் பறவைகள் சில நேரத்தில் கூட்டம் கூட்டமாகப் பறந்து வானில் ஒலி எழுப்புகின்றன. பெய்சிங்கிலிருந்து வந்த பயணி செய்சின் அம்மையார் கூறியதாவது, சிங்காய் ஏரி எழில் மிக்கது. மிக அதிகமான பறவைகள் உள்ளன. அவை, மனிதருடன் அன்னியோனியமாக இருக்கின்றன. ஒரு வகை கடற்பறவை அதிகமாக உள்ளது. பல பறவைகள், முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. நிழற்படங்களை எடுத்தோம் என்றார் அவர்.

பறவைகளின் இனப்பெருக்கத்திற்குத் தகுந்த இடமாக இத்தீவு விளங்குவதற்குத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த புவி நிலைமையும் இயற்கைச் சூழலும் முக்கிய காரணமாகும். மிதமான காலநிலை, அமைதியான சூழ்நிலை தழுவிய இவ்விடத்தில் மிகுந்த நீர், புல், அதிகமான மீன்கள் ஆகியவை உள்ளன. பறவைகள், அவற்றின் பழக்க வழக்கங்கள், விருப்பம் ஆகியவற்றுக்கேற்ப, வேறுபட்ட புவி நிலையையும் உயிரின வாழ்க்கைச் சூழ்நிலையும் தேர்ந்தெடுத்துக் கூடுகளை அமைக்கின்றன. தீவில் அதிக எண்ணிக்கையிலான பறவைகள் தங்கியிருப்பதன் காரணமாக அது புகழ்பெற்றுள்ளது. பறவைத் தீவு, பறவைகள் வாழ்ந்து இனப் பெருக்கச் செய்யும் நல்ல இடமாக விளங்குவதற்கு, இத்தீவின் தனிச்சிறப்பு வாய்ந்த புவியியல் நிலையும் சீரான சுற்றுச் சூழலும் முக்கிய காரணங்களாகும். இந்தத் தீவில் நில அமைவு மட்டமானது. மித வெப்பக் காலநிலை. சுற்றுச்சூழல் அமைதியானது. நீர் தாவரங்கள் அதிக அளவில் வளர்கின்றன. மீன்களின் வகைகள் பலவிதமானவை. இதன் விளைவாக, பறவைகள் கூட்டம் கூட்டமாக இங்கு வருகின்றன. பறவைத் தீவின் உயிரின வாழ்க்கைச் சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், பறவைகளின் வாழ்வைப் பாதிக்காமல் இருக்கவும் அருகில் பறவைகளைக் கண்டுகளிக்கும் பயணிகளின் விருப்பத்தை நிறைவு செய்யவும் உள்ளூர் அரசு, இத்தீவில் மேடையொன்றைக் கட்டியுள்ளது.

பயணிகள் இம்மேடையில் ஏறி, மன நிறைவுடன் பறவைகளைக் கண்டுகளிக்கலாம். மத்திய சீனாவின் ஹொனாய் மாநிலத்தைச் சேர்ந்த சோயிங் அம்மையார் இது பற்றி கூறியதாவது, இவ்வளவு அதிகமான பறவைகள் ஒன்று கூடியிருப்பதை முன்னெப்பொழுதும் நான் கண்டதில்லை. இக்காட்சி மிகவும் கம்பீரமானது. வியப்பானது. இத்தகைய வாய்ப்பு அரிது. உலகில் இத்தகைய பறவைச் சுவர்க்கம் இருப்பதற்கு நன்றி என்றார். ஹைசின் மலை, சிங்ஹைய் ஏரியில் மற்றொரு காட்சித் தலமாகும். அது, இந்த ஏரியின் மையப்பகுயின் தெற்கில் அமைந்துள்ளது. ஹைய்சின் மலையின் சுற்றுச்சூழல் அழகானது, அமைதியானது. மெல்லிய காற்று வீசுகின்றது. மலையில் கோயிலும் புத்த மத மண்டபமும் உள்ளன. அவற்றுள் புத்தர் உருவச் சிலைகளும் சுவர் ஓவியங்களும் காணப்படுகின்றன. மலையில் ஏறி சுற்றுப்புறத்தைப் பார்க்கும் போது, அழகான இயற்கை ஓவியம் போல தென்படுகின்றது. மகிழ்ச்சியடைந்த பயணிகள் இவ்விடத்தை விட்டுச் செல்ல விரும்புவதில்லை. தற்போது, சிங்ஹைய் ஏரியின் தனிச்சிறப்புடைய பீடபூமிக் காட்சியும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள சமூகப் பண்பாட்டுக் காட்சியும், மேலும் அதிகமான பயணிகளை ஈர்த்துவருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 50 விழுக்காடு என்ற அளவில் அதிகரித்துவருகின்றது.

கடந்த ஆண்டில் இவ்விடத்துக்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இவர்களில் பலர் வெளிநாட்டுப் பயணிகள். பிரெஞ்சு பயணி கலன். மாக்லீட் கூறியதாவது, சிங்ஹைய் ஏரி மிகவும் அழகானது என நான் கருதுகின்றேன். சுற்றுலா நிகழ்ச்சிகள் பலவிதமானவை. அத்துடன், இங்குள்ள மக்கள் அழகான ஆடைகளை அணிகின்றனர். மிகவும் நாகரிகம். நான் மிகவும் விரும்புகின்றேன் என்றார். சிங்ஹைய் ஏரி, கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் அமைந்துள்ளதால், குளிர் காலத்தில் அங்கு குளிராக உள்ளது. இதனால், கோடை காலத்தில் அங்கு செல்வது நல்லது. ஆனால், இந்த ஏரியில் சராசரி பகல் வெப்ப நிலை சுமார் 15 டிகிரி செல்சியஸ். இதனால், பயணிகள் சற்று கூடுதலாக ஆடைகளைக் கொண்டு சென்றால் நல்லது. கடந்த சில ஆண்டுகளாக, சிங்ஹைய் ஏரியின் சுற்றுப்புறங்களில் அடிப்படை வசதிகளின் கட்டுமானப் பணி தொடர்ந்து வலுப்பட்டுவருவதால், உறைவிட மற்றும் உணவக நிலைமை பெரிதும் மேம்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சுவையான உணவு வகைகள் அங்கு விற்பனையாகின்றன. 3 நட்சத்திர ஹோட்டல்கள் பயணிகளின் தேவையை நிறைவு செய்கின்றன.