சீனாவில் பனி அடர்ந்த பீடபூமியை கண்களைப் போல் பேணிக்காக்க வேண்டும் என்று சீன திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைவர் ஜாங்பபிச்சே கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கி்ல், சீன தேசிய மக்கள் பேரவை ஆண்டு கூட்டத்தொடரில் பேசிய அவர், வேளாண் மற்றும் கால்நடை தொழில், சுற்றுலா, திபெத்திய மருத்துவம்-மருந்து முதலிய பீடபூமியின் தனித்தன்மை வாய்ந்த தொழில்களை வளர்க்கும் போது, திபெத், எவ்விதத்திலும், சுற்றுச்சூழலை விலையாக கொடுக்காது. கடும் மாசு ஏற்படுத்தும் தொழிலை வளர்க்காது என்றார். கடந்த சில ஆண்டுகளாக, குடிபெயரும் ஆயர்கள், அந்த வாழ்க்கை முறையை கைவிட்டு நிரந்தரமாக குடியமர்ந்து, வனம் வளர்ப்பதால் திபெத் பீடபூமி புல் வெளி இயற்கை காடுகள் ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.
|