• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-14 18:01:27    
காய்கறி உருண்டை

cri

கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம்

ராஜாராம், கலையரசி இருவரும் இன்று காய்கறி உருண்டை தயாரிப்பு முறை பற்றி கூறுகின்றார்கள்.

ராஜா.....சமீபத்தில் சீன உணவு அரங்கத்தில் அறிமுகப்படுத்திய காய்கறி உணவு வகைகள் சைவப்பிரியர்களுக்கு மிகவும் விருப்பமாக உள்ளது. இப்போது நீங்கள் குறிப்பிடும் காய்கறி உணவும் அவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகின்றேன்.

கலை.....ஆமாம். நமது நண்பர்களில் பெரும்பாலானோர் சைவ உணவு விரும்புகின்றவர்கள். ஆகவே அவர்களின் அக்கறையை கருத்தில் கொண்டு காய்கறி உணவுகளை சொல்ல வேண்டும். இல்லையென்றால் நிகழ்ச்சியின் பயன் மிக குறையும். அப்படித்தானே.

ராஜா.....சைவ நண்பர்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

 

கலை.....சரி இன்றுக்கு சமைக்க போகின்ற காய்கறி உணவு பற்றி கூறுகின்றேன். அதற்கு தேவையான பொருட்கள் பின்வருமாறு. கவனமாக கேட்டு குறிப்பு எழுதுங்கள் நண்பர்களே.

ராஜா.....எழுதுகின்றேன்.

கலை......முட்டை இரண்டு, உருளை கிழங்கு 100 கிராம், மக்கச் சோளம் 50 கிராம். காளான் 50 கிராம். பச்சை கீரை இலை கொஞ்சம். சுவைக்கு ஏற்ப உப்பு, வாசனை மசாலா பொருட்கள்.

ராஜா.....கேட்பது மிக எளிதான பொருட்கள். எங்கள் வீட்டில் இதை தயாரிப்பது கஷிடம் இல்லை. நான் மீண்டும் சொல்கின்றேன்.

கலை.... சொல்லுங்கள்.

ராஜா..... முட்டை இரண்டு, உருளை கிழங்கு 100 கிராம், காளான் 50 கிராம், மக்காச் சோளம் 50 கிராம், பச்சை கீரை இலை கொஞ்சம். உங்களுக்கு பிடிக்கும் அளவு. உப்பு, சுவை பொருட்கள்.