
விரைவு உணவால் ஏற்படும் நோய்
பிரிட்டனில் விரைவு உணவு உட்கொள்வதில் அதிக நாட்டம் கொண்ட ஓர் இளைஞர் இருந்தார். அவர் பதினாங்கு வயதிலிருந்தே நாள்தோறும் உருளைக்கிழங்கு பொறியல் அவரை பொறியல் முதலிய விரைவு உணவுப்பொருட்களை உட்கொள்ளத் துவங்கினார். இதனால் அவருக்கு ஊட்டச் சத்துக்குறைவு ஏற்பட்டது. இறுதியில் ஈரல் வீக்கம் மற்றும் இரத்த சோகை நோயால் இறந்து போன போது, அவருக்கு வயது இருப்பது மட்டுமே.

மாற்று சிறு நீரகம் கொண்ட பின்
கிரோஷியாவில் குடிவெறியர் ஒருவர் ஒரு பெண்ணின் சிறு நீரகத்தை மாற்று உறுப்பாக பெற்றுக்கொண்ட பின், முந்தைய குடி வெறி பழக்கத்தை விட்டுவிட்டார். அவர் வீட்டு வேலை மற்றும் பின்னல் வேலையை மிகவும் விரும்பும் அளவுக்குச் சென்றார். இது அறுவை சிகிச்சையின் பக்க விளைவு தான் என்று ஐயம் கொண்டார் அவர், மருத்துவ மனைக்கு புகார் செய்ய தயாராக இருக்கிறார்.
தப்பி ஓடிய சிறை கைதி
ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள சிறை ஒன்றில் ஒருகைதி உடல் பருமனை குறைக்க மருத்துவ மனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார். இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, அவர் சிறையிலிருந்து தப்பிச்சென்றார். இம்மருத்துவமனையின் சன்னல் அருகிலுள்ள சுவரில் ஓட்டைப் போட்டார். அவருடைய உடல் எடை பதினாங்கு கிலோகிராம் குறைக்கப்பட்டதால், இறுதியில் அவர் இந்த ஓட்டை வழியாக எளிதில் வெளியே தப்பித்துச்சென்றதாகத் தெரிய வருகிறது.
போலி மரணம்
அமெரிக்காவின் தெற்கு காரோலினா மாநிலத்தின் காவற்துறை ஒன்று இருப்பதேழு ஆண்டுகளுக்கு முன் இறந்து போனதாக கூறப்பட்ட ஒருவரை அண்மையில் கைது செய்தது. பிள்ளைகளின் பராமரிப்புக் கட்டணத்தை செலுத்த மறுத்த, அவர் தமது உற்றார் உறவினரின் உதவியுடன் தாம் மரணமடைந்ததாக பொய் சொன்னார். பின்னர், அவர் மறைமுகமாக வாழ்வதற்கு பதிலாக, உண்மையான பெயரில் இரண்டு முறை திருமணம் செய்தார். இந்த ஆண் இப்போது திருப்பிச் செலுத்த வேண்டிய பிள்ளைகளின் பராமரிப்பு கட்டணம், 30 ஆயிரம் அமெரிக்க டாலராகும். அத்துடன் சிறையிலிருந்து தப்பிச்செல்ல விருப்பதாக குற்றச்சாட்டப்படுகிறார் என காவல் துறை கூறுகிறது.
|