• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-13 17:56:29    
சீனாவின் புதிய கிராமப்புற வளர்ச்சி

cri

அண்மையில் சீன அரசு கிராம வளர்ச்சி திட்டத்தை வகுத்துள்ளது. விவசாயத்திற்கு உதவித்தொகை வழங்குவது, விவசாய வரியைக் குறைப்பது, கிராமங்களில் அடிப்படை வசதிகளை வலுப்படுத்துவது ஆகியவற்றின் மூலம், பின்தங்கிய கிராமங்களை வளமிக்க நாகரிகமான புதிய கிராமங்களாக மாற்றுவதற்கு அந்தத் திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

தென்மேற்கு சீனாவிலுள்ள குவே சாவ் மாநிலத்தில் அதிகமான விவசாயிகள் வசிக்கின்றனர். அதன் மலைப்பகுதியில் உள்ள சியேள தி என்ற சிற்றூரில், கடந்த சில ஆண்டுகளாக வருமானக் குறைவு, மற்றும் போதிய அடிப்படை வசதி இல்லாத பிரச்சினைகளால், அங்கு வாழ்க்கை நிலை சரியாக இல்லை. கிராமவாசி சாங் தே மிங் எமது செய்தியாளரிடம் கூறியதாவது:

2000ம் ஆண்டில், இங்கு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இங்கு இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்கள் அரசின் வழிகாட்டலில், வளமடையும் விருப்பம் கொண்டுள்ளனர் என்றார் அவர்.

கிராமத்தின் சூழலை மேம்படுத்தி, விவசாயியின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற சாங் தே மிங்கின் விருப்பம், பெரும்பாலான சீன விவசாயிகளின் மனக்குரலைப் பிரதிபலிக்கிறது. வரலாறு மற்றும் அமைப்பு முறையின் காரணிகளால், கடந்த 50 ஆண்டுகளில் நகரங்களை விட, சீனக் கிராமங்களின் வளர்ச்சி பின்தங்கியது.

சீன மக்கள் தொகையில் பெரும்பாலோர், விவசாயிகள். கிராமப் பிரச்சினை, நாட்டின் உறுதிப்பாடு மற்றும் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியுடன் தொடர்புடையது. கடந்த சில ஆண்டுகளாக, இப்பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில், கிராம வளர்ச்சியை ஆதரிக்கும் பல நடவடிக்கைகளை சீன அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளுக்கு நேரடி உதவி வழங்கி, வேளாண் வரியை நீக்குவது முதலிய நடவடிக்கைகளால், விவசாயிகளின் உற்பத்தித் திறனை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சீன நகரங்கள் வேகமான வளர்ச்சியடைந்ததால், நகரங்களுக்கும் கிராமங்களுக்கிடையே இடைவெளி தொடர்ந்து விரிவாகி விட்டது.

சீன மத்திய நிதிக்குழுவின் துணைத் தலைவர் சென் சிவென் கூறியதாவது:

கடந்த ஆண்டில், விவசாயிகளின் தனிநபர் வருமானம், 3255 யுவானாகும். நகரவாசிகளின் தனிநபர் வருமானம், 10493 யுவானாகும். இந்த இடைவெளி, சீர்திருத்த கொள்கை துவங்கிய போது இருந்ததை விட, மேலும் பெரியது. தவிர, கல்வி, சுகாதாரம், பண்பாடு உள்ளிட்ட அரசு வழங்கிய பொது சேவைகளை விவசாயிகள் அனுபவிப்பதில் இருந்த இடைவெளி, வருமானத்தில் இருந்த இடைவெளியைத் தாண்டியுள்ளது என்றார் அவர்.

கிராமப் பிரச்சினைகளைத் தீர்க்க, புதுவகை கிராமங்களை உருவாக்கும் கொள்கையை சீனா அறிவித்துள்ளது. இக்கொள்கையின் படி, அடுத்த பத்துக்கு மேலான ஆண்டுகளில், கிராமங்களின் அடிப்படை வசதியை மேம்படுத்தி, சமூக-பொருளாதார வளர்ச்சியின் பயன்களை விவசாயிகள் அனுபவிக்க, சீனா, பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யும்.

சில ஆண்டுகளுக்கு முன், இந்தக் கொள்கை, சியேள தி கிராமத்தில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. உள்ளூர் அரசு, லட்சக்கணக்கான யுவானை ஒதுக்கீடு செய்து, சாலைகள், வீடுகள், சுகாதார வசதிகள் மற்றும் பண்பாட்டு இடங்களை கட்டி, பணப் பயிர் சாகுபடியை ஊக்குவித்தது. இதனால், முன்பு வறுமைக் கிராமமாக இருந்த சியேள தி, தற்போது வளமடைந்த புதிய கிராமமாக மாறி விட்டது.