
பட்டுப் பாதை
பட்டுப்பாதையின் முழு நீளம், 7000க்கும் அதிகமான கிலோமீட்டர். சீனாவிலான அதன் நீளம் முழு நீளத்தில் 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. பட்டுப்பாதை, பண்டைக் காலத்தில் ஆசியாவுக்கு ஊடாகச் சென்று, ஐரோப்பிய மற்றும் ஆசிய கண்டத்தை இணைத்திருக்கும் புகழ் பெற்ற தரை வணிகப் பாதையாகத் திகழ்ந்தது. அது சுமார் ஈராயிரம் ஆண்டு வரலாறுடையது.

சுவர் ஓவியம்
பண்டைக் காலப் பட்டுப்பாதை, பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா நெறியாகும். இப்பட்டுப் பாதை நெடுகிலும் தேசிய இனப் பாணியுடன் கூடிய நகரங்களும் அழகான இயற்கை காட்சித் தலங்களும் அதிகமான வரலாற்றுப் பண்பாட்டு மரபுச்சிதிலங்களும் உள்ளன. இதனால், இப்பட்டுப் பாதை, பயணிகள் சுற்றுலா மேற்கொள்ள விரும்பும் முக்கிய நெறியாக மாறியுள்ளது.

கடல் வழிப் பட்டுப் பாதை
பட்டுப் பாதையில் சுற்றுலா, வெளிநாட்டுப் பயணிகளால் பெரிதும் வரவேற்கப்படும் சுற்றுலா நிகழ்ச்சியாகும்.
|