• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-14 21:19:18    
விவிலியக் கதைகள்

cri
ஒரு கல்லில் சூரியன், நிலா, நீந்துவன, பறப்பன, ஊர்வன என்ற உயிரினங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. இது பைபிளின் ஜெனிசிஸ் பகுதியில் கூறப்பட்டுள்ள படைப்புக்கதையுடன் தொடர்புடையது என்கிறார் வேங்.

மற்றொரு கல்லில், நன்மை-தீமை பற்றிய அறிவு மரத்தின் கனியைப் பறிக்கும் ஒரு பெண்ணின் வலது கரத்தை பாம்பு தீண்டும் காட்சி இருக்கிறது. இது ஏவாளை சாத்தான் ஏமாற்றிய தந்திரக்காட்சி என்று கூறுகிறார் வேங்.

இன்னொரு கல்லில், நான்கு மீனவர்களின் சித்திரங்கள் காணப்படுகின்றன. இவை ஏசுநாதரின் சீடர்களான பீட்டர், ஆண்ட்ரூ, ஜேம்ஸ், ஜான் ஆகியோரின் சித்திரங்கள் என்கிறார் வேங். இந்த நான்கு சீடர்களுமே மீனவர்கள்.

ஆறாவது கல்லில், ஒரு தொழுவம் போன்ற இடத்தில் அமர்ந்துள்ள ஒரு ஆணையும், பெண்ணையும் நோக்கி மூன்று ஆட்கள் அன்பளிப்புக்களுடன் வருகிறார்கள். மற்றவர்கள் வலது புறத்தில் மண்டியிட்டு அமர்ந்துள்ளனர். இது முதலாவது கிறிஸ்துமஸ் காட்சி என்கிறார். அந்த மூன்று ஆட்களும், கிழக்கில் தோன்றிய நட்சத்திரத்தைக் கண்டு கிறிஸ்து பிறந்து விட்டதை அறிந்து வந்த தீர்க்கதரிசிகள் என்பது அவருடைய வாதம்.

இந்தக் கல்சித்திரங்கள். அகழ்ந்து எடுக்கப்பட்ட கல்லறை, கி.பி 100 முதல் 220 வரை ஆட்சி செய்த ஹான் வமிசத்தைச் சேர்ந்தது என்பதை அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்ட பிரபு, கைவினைக்கலைஞர்களை வரவழைத்து கல்சித்திரங்களைச் செலுக்கச் சொல்லியிருக்கிறார் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால் அவர் கிறிஸ்தவராக இருந்திருப்பாரா? வேங்கின் மதிப்பீடு சரியாக இருக்குமானால், முதல் நூற்றாண்டின் இறுதியிலேயே கிறிஸ்தவம் சீனாவுக்கு வந்து விட்டது எனலாம். ஆனால் வேங் கூறுவதை பல சீன வரலாற்று ஆய்வாளர்களும், தொல்லியல் அறிஞர்களும், மறுக்கின்றனர். அவர்களுடைய கருத்துப்படி, ஏழாவது நூற்றாண்டின் நடுவில்தான் கிறிஸ்தவம் சீனாவுக்கு வந்திருக்க வேண்டும்.

இதற்கு ஆதாரமாக 1625இல் சியான் (Xian) நகரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டுச் சித்திரத்தைக் காட்டுகின்றனர். 618 முதல் 907 வரை சீனாவை ஆண்ட தாங் வமிசத்தைச் சேர்ந்த தைசுங் (Tai Song) பேரரசரை ஸிரியாவில் இருந்து வந்த ஆலோப்பென் என்ற கிறிஸ்தவத் துறவி கி. பி. 635 ஆண்டில் சந்தித்தார் என்ற தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.

இருபதாம் நூற்றாண்டுக்கு முன்பாக மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் சீனாவில் கிறிஸ்தவம் தழைத்தோங்கியது. முதலில், 1271 முதல் 1368 வரை ஆண்ட யுவான் வமிச காலத்திலும், 1368 முதல் 1644 வரை ஆண்ட பிற்கால மிங் வமிச காலத்திலும், 1644 முதல் 1911 வரை ஆண்ட முற்கால ச்சிங் வமிச காலத்திலும் கிறிஸ்தவம் தழைத்தது. பின்னர் 1840 முதல் 1842 வரையிலான முதலாவது கஞ்சாப் போர் காலத்தில் செல்வாக்கு பெற்றது.

இரண்டாவது காலகட்டமாக, 13வது நூற்றாண்டில் சிரியாவின் நெஸ்ட்டோரியன்களும், ரோமின் கத்தோலிக்கர்களும் சீனாவுக்கு வந்து ஆளும் மங்கோலியர்களிடையேயும், சிறுபான்மை இனக்குழுக்கனிடையேயும் கிறிஸ்தவத்தைப் பரப்பினர். ஆனால் யுவான் வமிசம் வீழ்ச்சி அடைந்த போது, மங்கோலியர்கள் வடக்குப் புல்வெளிக்கு பின்வாங்கிச் செல்லவே, கிறிஸ்தவத்தின் செல்வாக்கும் மங்கியது.