2008ஆம் ஆண்டுக்குள், சீனாவின் அனைத்துக் கிராமங்களுக்கும் தொலைபேசி இணைப்பு வழங்கிட சீனா திட்டமிட்டுள்ளது என்று தகவல் தொழில் துறை துணை அமைச்சர் Xi Guo Hua கூறியுள்ளார். இன்று பெய்ஜிங்கில் "தொலைத்தூர தகவல் தொடர்பு சேவை பற்றிய 2006ஆம் ஆண்டு கூட்டத்தில்" பேசிய அவர், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், சீனாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தொலைபேசி வசதிகள் வழங்கப்படும் என்றும், கிராமங்களில் தொலைபேசிகளின் பரவல் விகிதம் மேலும் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தவிர, இணைய தளப் பயன்பாட்டை பரவலாக்கி, கிராமங்களில் தகவல் தொடர்பு நிலை உயர்த்தப்படும் என்றார் அவர். தற்போது, சீனாவில் 90 விழுக்காட்டுக்கு அதிகமான கிராமங்களுக்கு தொலைபேசி இணைப்புக்கள் வழங்கப்பட்டு விட்டன.
|