
பெய்சிங் 2008 ஒலிம்பிக் தீபந்தம் பற்றிய வடிவமைப்புகளைச் சேகரிக்கும் நடவடிக்கை அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது இப்பணி நிபுணர்களின் மதிப்பீட்டுக் கட்டத்தில் நுழைந்துள்ளது. சீனாவின் 28 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள், மாநகரங்கள், ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், தைவான் பிரதேசம் ஆகியவற்றிலிருந்தும், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்கேரி, இத்தாலி, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்தும் இந்த வடிவமைப்புகள் வந்துள்ளன. நிபுணர் மதிப்பீட்டுப் பணி மார்ச் திங்கள் முதல் நாள் முதல் ஏப்பரல் 18 ஆம் வரை நடைபெறுகின்றது. மதிப்பீட்டுக் குழு இந்த படைப்புகளிலிருந்து மூன்றை தேர்ந்தெடுத்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு இறுதியில் நிர்ணயிக்கப்படும்.
கால் பந்து 2007ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியின் தேர்வுப் போட்டிக்கான E பிரிவின் இரண்டாம் சுற்று பந்தயம் மார்ச் முதல் நாள் நடைபெற்றது. ஐக்கிய அரபு எமிரெட்டில் சீன அணிக்கும் ஈராக் அணிக்குமிடையில் நடைபெற்ற போட்டியில் சீன அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஈராக் அணியிடம் தோல்வி கண்டது. பலஸ்தீன அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் அணியை வென்றது. தற்போது சீன அணி இந்த பிரிவில் முதலிடத்தில் உள்ளது. சீன மகளிர் கால்பந்து அணி மார்ச் முதல் நாள் ஜெர்மனியின் ஹொம்பர்கில் ஜெர்மன் அணியுடன் நடத்திய ஒரு நட்புப் போட்டியில் சீன அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மன் அணியைத் தோற்கடித்தது.

கோல்ப் சீனாவின் முதலாவது கோல்ப் அணி அண்மையில் நிறுவப்படும் என்று சீனத் தேசிய விளையாட்டு நிர்வாகத்தின் அதிகாரியும் சீனக் கோல்ப் சங்கத்தின் துணை தலைவருமான சாங் சியோ நிங் அண்மையில் தெரிவித்தார். சீனாவில் கோல்ப் விளையாட்டு துவங்கி அதிக காலம் இல்லை. சீன அணியின் விளையாட்டுத் தரத்தை உயர்த்துவது தனது எதிர்கால முக்கிய பணியாக சீனக் கோல்ப் சங்கம் கருதுகின்றது. இவ்வாண்டின் டிசம்பர் திங்களில் கத்தாரின் தலைநகர் டோஹா நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை சாதிக்க சீன அணி பாடுபடும் என்றும் சாங் சியோ நிங் கூறினார்.
டென்னிஸ் ஐக்கிய அரபு எமிரேட்டின் துபை டென்னிஸ் ஒப்பன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் போட்டி மார்ச் 4ஆம் நாள் நடைபெற்றது. உலகப் பெயர் வரிசையில் முதலிடம் வகிக்கும் சுவீட்சர்லந்து வீரருக்கும் ஸ்பெயின் புகழ்பெற்ற வீரர் நடாலுக்குமிடையில் நடைபெற்றது. இறுதியில் நடால் 2-1 என்ற செட் கணக்கில் பெட்லரைத் தோற்கடித்துச் சாம்பியன் பட்டம் பெற்றார்.
|