• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-15 08:45:52    
பல கருத்துக்கள்

cri

முதல் கடதம் மதுரை அண்ணாநகர் என். ராமசாமி. நவம்பர் 11 சீனப் பாண்பாடு நிகழ்ச்சியில் பஞ்ச பூதங்கள் பற்றி பேசப்பட்டதை பாராட்டியுள்ளார். சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில் பழைய பண்ணை அடிமை முறை பற்றி கூறப்பட்டதையும் பாராட்டுகின்றார். இலங்கை காத்தான்குடி எம்.எம். நபீஃஸ், அறிவியல் உலகம் நிகழ்ச்சியை விபரம் இரண்டு முறை ஒலிபரப்புங்கள் என்கிறார். அடுத்த சில கடிதங்களும் இலங்கையில் இருந்து வந்துள்ளனஸ்ரீ தமிழ் நாட்டுக்கு மட்டுமின்றி, முழு உலகின் தேவைக்கு ஏற்ப, பல செய்திகளை இணைத்து சீன வானொலி ஒலிபரப்புவதாக இலங்கை மவனல்லா நேயர் எம்.ஏ. எம். ரபிஃ கூறுகின்றார். சீன வானொலி நிகழ்ச்சிகள் பிரயோஜனமாக உள்ளன என்கிறார். காத்தான்குடி எம். அஸ்மீர், கினிகத்தேனை நேயர் வி. துரைராஜா சீனாவில் சுரங்க விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. அப்பாவி உயிர்கள் பலியாகாமல் சீன அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றார். மற்றொரு தாத்தான்குடி நேயர் எம்.பி.எம். ஹஸ்மி, சீனாவில் பயணம் செய்யும் வாய்ப்பு இந்திய நேயர்களுக்கே கிடைத்து வருகின்றது. எங்களுக்கும் இந்த வாய்ப்பு வழங்குங்கள் என்று கோருகின்றார்.

வாணி-- நேயர்களிடையே சீன வானொலி எவ்விதப் பாகுபாடும் காட்டுவதில்லை. இலங்கை நேயர்களும் முனைப்புடன் கடிதங்கள் எழுதி, கருத்தரங்குகள் நடத்தி, ஆர்வம் காட்டினால் கட்டாயம் சீனாவுக்கு அழைப்போம். மற்ற நேயர்களின் பாராட்டுக்கு நன்றி.

ராஜா-- இலங்கைக் கடிதங்களைத் தொடரலாமா? காத்தான்குடி நேயர் முன்சீர், வானொலி கேட்கும் போது மின்சாரம் தடைப்பட்டதால், என்சைக்ளோபீடியா மூலம் தகவல் அறஇந்து விடைத்தாள்களை அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார். உங்கள் செய்திகளில் சிறஇய நாடுகள் பற்றிய செய்திகளைக் கூடத் தகுகிறஈர்கள் என்று பாராட்டியுள்ளார். காத்தான்குடி அகமது ஸம்ஹான் மற்றொரு காத்தான்குடி நேயர் அ.பா.ஸிப்னா, சுனாமியால் பாதிக்கப்பட்ட தமக்கு ஒரு நிறுவனம் வானொலிப் பெட்டி வழங்கியதாகவும் அதன் மூலம் நிகழ்ச்சிகளைக் கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வாணி-- இலங்கை நேயர்களின் பாராட்டுக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. ராஜா-- கரிவலம் வந்த நல்லூர் ஜி. கிருஷ்ணமூர்த்தி கடந்த நவம்பர் திங்கள் 25ந் நாள் உங்கள் குரல் நிகழ்ச்சியில் தருமடிரி மாவட்ட நேயர்களின் கருத்துரையையும், கமிழில் வீனவானொலிக்கு முதன் முதலில் மின்னஞ்சல் அனுப்பிய தகர்கரமனுடன் விழுப்புரம் பாண்டியராஜனும், செல்வமும் நடத்திய உரையாடல் பயனுள்ளதாக இருந்தது என்று பாராட்டுகின்றார். நவம்பர் 8 செய்தியில் 6 தரப்புப் பேச்சுவார்த்தையில் சீனாவின் பங்களிப்பு பற்றி கூறியதை பாராட்டியுள்ளார் மறைமலைநகர் சி. மல்லிகாதேவி, 30 பள்ளிப்பட்டி டி. ஆர். சுப்பிரமணியன், பீகிங் ஆப்ரா எனப்படும் இசை நாடகத்தை குறுந்தகட்டில் பதிவு செய்து நேயர்களுக்கு வழங்கங்கள் என்று யோசனை கூறுகின்றார். சென்னை மயிலர்ழர் கே.பட்டாபி டிசம்பர் முதல்நாள் செய்தித் தொகுப்பில் எய்ட்ஸ் நோய் தடுப்பு பற்றி ஒலிபரப்பானதை பாராட்டுகின்றார். பெரம்பலூர் உத்திரக்குடி நேயர் சு.கலைவாணன் ராதிகா, அக்டோபர் 30 சீன சமூக வாழ்வு நிகழ்ச்சியில் சீனாவில் மணமக்கள் தொடர்பு மையம் பற்றி கூறப்பட்டது. தமிழகத்தில் ஆண்-பெண் பொருத்தம் பார்க்க ஜாதகம் பரிமாறுவார்கள். சீனாவில் ஜாதகம் உண்டா?என்று வினாவிகின்றார்.