2008 பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஒளிப்பந்த வடிவமைப்புகளை சேகரிக்கும் நடவடிக்கை அண்மையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடந்த டிசம்பர் திங்கள் 6ஆம் நாள் இந்நடவடிக்கை துவங்கியது முதல் ஏராளமான படைப்புகள் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டிக்குக் கிடைத்துள்ளன. சீனப் பெருநிலப்பகுதியின் 28 மாநிலங்கள், மாநகரங்கள் தன்னாட்சிப் பிரதேசங்கள், சீன ஹங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசம், சீனத் தைவான் பிரதேசம் ஆகியவை தவிர அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்கேரி, இத்தாலி, ஜப்பான், இந்தோனேசியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்தும் அவை வந்தன. மார்ச் முதல் நாள் முதல் ஏப்ரல் திங்கள் 18ஆம் நாள் வரை பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டியின் மதிப்பீட்டுக் குழு இந்த வடிவமைப்புக்களை பரிசீலனை செய்கிறது.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் கமிட்டியின் சட்டமியற்றல் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது என்று இந்த கமிட்டியின் தலைவர் லீயு ச்சி மார்சி 10ஆம் நாள் சீனத் தேசிய மக்கள் பேரவை ஆண்டு கூட்டத்தில் தெரிவித்தார். சிறப்புமிக்க, உயர் தரமுடைய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கு இது பற்றிய சட்டங்களை இயற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சட்டங்களை வகுப்பது பற்றிய ஆய்வு பணி ஏற்கனவே துவங்கியுள்ளது என்று லியூ ச்சி கூறினார்.
பூப்பந்து 2006ஆம் ஆண்டுக்கான பூப்பந்து மாஸ்டர் போட்டி மார்ச் 12ஆம் நாள் சீனாவின் செங் து நகரில் நிறைவடைந்தது. அனைத்து 5 நிகழ்ச்சிகளிலும் சீன வீரர்களும் வீராங்கனைகளும் 4 தங்கப் பதக்கங்களை பெற்றனர். ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் சென் ஜின் 2-0 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் புகழ் பெற்ற வீரர் PETER GADE ஐத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார்.
மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் சீன வீரர் 2-1 என்ற செட் கணக்கில் தனது அணித் தோழியரான சியே சிங் பாங்கைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். சீன வீராங்கனைகளான கௌ லிங், ஹுவாங் சுய் ஜோடி மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் பெற்றது. சீன வீரர் சியே சுங்போ, வீராங்கனை சாங் யாவென் ஜோடி கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் சான்பியன் பட்டம் வென்றது. டென்மார்க் ஆடவர்களான ERIKSEN, HENSEN ஜோடி ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது.
|