• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-24 16:32:36    
சாம்பியன் பட்டம் பெற்ற பெடலர்

cri

டென்னிஸ், ATP இன் இந்த போட்டிப் பருவத்தின் முதலாவது மாஸ்டர் போட்டியான இந்தியன்வில்ஸ் மாஸ்டர் போட்டியின் இறுதி ஆட்டம் நிறைவடைந்தது. சுவீட்சர்லந்தின் புகழ் பெற்ற வீரர் பெடலர் 3-0 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் புரேகரைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். இந்த போட்டியில் அவர் சாம்பியன் பட்டம் பெறுவது இது மூன்றாவது தடவை. அமெரிக்க வீரர் புரேகர் போட்டியில் தோல்வியுற்ற போதிலும், இந்த ஆண்டில் அவர் பெற்ற சாதனை பாராட்டத்தக்கது. புதிய உலக பெயர் வரிசையில் அவர் 14வது இடத்திலிருந்து 9 வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

தடகளப் போட்டி பதினோராவது உலக உள்ளரங்கு தடகளச் சாம்பியன் பட்டப் போட்டி மார்ச் பன்னிரண்டாம் நாள் மாஸ்கோவில் நிறைவடைந்தது. ரஷிய அணி எட்டு தங்கம், ஐந்து வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்களைப் பெற்று முதலிடம் வகிக்கிறது. அமெரிக்க அணி ஏழு தங்கம் நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. சீனா அனுப்பிய பன்னிரண்டு வீரர்கள் சாதாரணமாக விளையாடியதால் இறுதிப் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறவில்லை. மகளிருக்கான அறுபது மீட்டர் தடை ஓட்டப் போட்டிக்கான தகுதி பெறும் ஓட்டத்தில் சீன வீராங்கனை பொங் யுன் சீனாவின் தேசிய சாதனையை முறியடித்தார்.

கால்பந்து மார்ச் பதினேழாம் நாள் சர்வதேச கால்பந்து சம்மேளனம் உலக மகளிர் கால்பந்து அணிகளின் பெயர் வரிசை பட்டியலை அறிவித்துள்ளது. ஜெர்மன் அணி முதலிடம் வகிக்கின்றது. அமெரிக்க அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. நார்வே அணி மூன்றாம் இடமும் பிரேசில் அணி நான்காம் இடமும் வகிக்கின்றன. சீன அணி எட்டாம் இடத்தில் உள்ளது.

கார் ஓட்டப் போட்டி 2006ஆம் ஆண்டு போட்டிப் பருவத்துக்கான பெரும் பரிசு கார் ஓட்டப் போட்டியின் முதல் சுற்று மார்ச் திங்கள் பன்னிரண்டாம் நாள் பஹ்ரேயின் நகரில் நடைபெற்றது. கடந்த போட்டிப் பருவத்தில் சாம்பியன் பட்டம் பெற்ற ரெனால்ட் காரின் ஸ்பெயின் ஓட்டுநர் அலோங்சோ சாம்பியன் பட்டம் பெற்றார்.