• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-20 19:35:25    
நில நடுக்க முன்னறிவிப்பு கருவி

cri

"உண்மையான கலிபோர்னியா"எனும் நில நடுக்க முன்னறிவிப்பு கருவி ஒன்று, அண்மையில் அமெரிக்காவில் ஆராய்ந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அறிவியலாளர்கள் மண் அடுக்கு இயக்கத்துடன் தொடர்பான தகவல்களை கணிணியில் சேர்த்து கலிபோனியாவின் உண்மையான மண் அடுக்கு அமைப்பு போன்ற உருவப்படத்தை உருவாக்கினார்கள்.

சேர்க்கப்பட்ட தரவுகளின் படி இந்தக் கருவி எதிர்வரும் மண் அடுக்கின் இயக்கத்தை கணிக்கிறது. ஆயிவாளர்கள் இதை ஆதாரமாகக் கொண்டு நில நடுக்கத்தை முன்னறிவிக்க முடியும்.

மீன் தொட்டியை கழுவ முயன்ற பெண் பட்ட பாடு

ரஷியாவில் சான்க்ஸ் நகரைச் சேர்ந்த பெண் ஒருத்தி.தன் மகனின் மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்காக அதற்குள் கைவிட்டார். தொட்டியில் இருந்த தங்க மீன்கள் அவரது விரல்களைக் கடித்தன. 2 விரல்களில் உள்ள சதை முழுவதையும் அவை தின்றுவிட்டன. பெரும் போராட்டத்துக்குப் பிறகு கைவிலர்களை விடுவித்துக்கொண்டார். அதன் பிறகு காப்புறுதி மூலம் ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பந்தயத்தில் வெற்றிபெறுவதற்காக குதிரைகளுக்கு "வயாகரா"

குதிரைப் பந்தயத்தில் தாங்கள் பணம் கட்டிய குதிரைகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அந்தக் குதிரைகளுக்கு செக்ஸ் மாத்திரையான வயாகராவை சிலர் தீவனத்துடன் கொடுத்து இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வயாகரா கொடுக்கப்பட்ட குதிரைகளைக் கைப்பற்றினர். மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செக்ஸ் மாத்திரையான வயாகரா, எப்படி குதிரைகளை வேகமாக ஓடவைக்கும் என்பது அதிகாரிகளுக்கு புதிராக உள்ளது.

பிச்சைக்காரியின் மடியில் விழுந்த நோட்டுக் கட்டு

போலந்து நாட்டில் ரெயில் நிலையத்தில் பிச்சை எடுக்கும் ஒரு பிச்சைக்காரி, காலையில் கண் விழித்த போது அவள் மடியில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புக்கு நோட்டுக்கட்டு ஒன்று ஒரு உறையில் போடப்பட்டு கிடந்தது. உறையின் மீது பிச்சைக்காரர்களுக்கு என்று எழுதப்ப்டடு இருந்தது.

ஒரு தர்மப்பிரபுவால் அந்தப் பணம் முழுவதும் தனக்குத்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை அவளால் நம்ப முடியவில்லை. அவள் பணத்துடன் நேரே போலீஸ் நிலையம் சென்று பணத்தை ஒப்படைத்தாள்.

யார் இந்தப் பணத்தைப் போட்டது என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்வோம். அப்படி கண்டுபிடிக்க முடியாவிட்டால், பணத்தை பிச்சைக்காரியிடமே கொடுத்து விடுவோம் என்று போலீசார் கூறி உள்ளனர்.