• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-20 22:47:27    
இலகு வர்த்தக வாகனங்களின் வளர்ச்சி

cri

எரியாற்றலைச் சிக்கனமாக பயன்படுத்தும் பொருட்டு, மார்ச் திங்களுக்கு முன், இலகு வர்த்தக வாகனங்கள் மீது, சுற்று சூழல் பாதுகாப்புக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை நீக்குவதாக, சீன அரசு அறிவித்து, இலகு வர்த்தக வாகனங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிக்கும் கொள்கைகள் வெளியிடப்படும் என்று கூறியது. சீனாவின் இலகு வர்த்தக வாகனங்கள் விரைவாக வளர்ச்சியடைந்து, இவ்வாண்டின் கார் விற்பனை சந்தையில் நன்கு சாதனை பெறுவதை இந்நடவடிக்கை பிரதிபலிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெய்ஜிங்கின் ஒரு கார் விற்பனை சந்தையில், ஓச்சிங் என்பவர், தாம் விரும்பிய இலகு வர்த்தக வாகனத்தைத் தேர்ந்தெடுத்தார். கட்டுப்பாட்டை நீக்கும் அரசின் கொள்கை, தற்போது தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலை ஆகியவை, இலகு வர்த்தக வாகனத்தை வாங்குவதற்கு முக்கிய காரணங்களாகும் என்று எமது செய்தியாளரிடம் அவர் சொன்னார்.

சீனாவில், இவரைப் போன்று, விலை மலிவான தரமான வாகனத்தை வாங்க விரும்பும் நுகர்வோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதனால், இலகு வர்த்தக வாகனங்கள் சந்தையில் அதிகம் தேவைப்படுகின்றன. சீனக் கார் தொழில் சங்கத்தின் புள்ளிவிபரத்தின் படி, கடந்த ஆண்டின் வாகன விற்பனையில், இலகு வர்த்தக வாகனங்கள், 50 விழுக்காடாக இருந்தன. இந்த வாகனங்களின் எதிர்காலம் பற்றி, ஓச்சிங் நம்பிக்கை கொள்வதோடு, சில பிரச்சினைகளையும் கவனப்படுத்தினார். அவர் கூறியதாவது:

சிறிய வாகனத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கும் போது, அதன் பாதுகாப்புத்தன்மையைக் கவனத்தில் கொள்கின்றேன் என்றார்.

கட்டுப்பாட்டை நீக்கிய பிறகு, 39.2 விழுக்காட்டு நுகர்வோர், இலகு வர்த்தக வாகனங்களை வாங்க விரும்பியது, சீனாவின் ஒரு இணையதளம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது. இலகு வர்த்தக வாகனங்களை வாங்க கூடும் என்று, 30.5 விழுக்காட்டு நுகர்வோர் தெரிவித்தனர். விலை மலிவு, எரியாற்றல் சிக்கனம் ஆகியவை, இலகு வர்த்தக வாகனங்களின் முக்கிய மேம்பாடுகளாகும். இயக்கு ஆற்றல் போதாது, பாதுகாப்புத்தன்மை குறைவு முதலியவை அதன் முக்கிய குறைபாடுகளாகும் என்று நுகர்வோர் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து, சீனாவில் மிக பெரிய வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான தூங்பெஃங் பெக்கோட் நிறுவனத்தின் துணை ஆளுனர் தாங் தெங் கூறியதாவது:

இலகு வர்த்தக வாகனங்கள் பற்றி, பலர் தப்பான கருத்துக்களைக் கொள்ள கூடும். இலகு வர்த்தக வாகனங்களைப் பார்க்கும் போது, எளிதான தொழில் நுட்பத்தால் பின்தங்கிய உற்பத்தி பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக, நினைக்கின்றனர். உண்மையில், சர்வதேச வாகனச் சந்தையில், இலகு வர்த்தக வாகனங்கள், இப்பொருளை பிரதிபலிக்காது என்றார் அவர்.

நீண்டகாலமாக, இலகு வர்த்தக வாகனங்களைத் தயாரிக்கும் சில சீன தொழில் நிறுவனங்கள், சிறிய வாகனங்கள் மூலம், லாபம் அதிகமில்லை என்று கருதின. அத்துடன், செலவையும் விலையையும் குறைக்கும் பொருட்டு, உற்பத்தி தொழில் நுட்பத்திலும், பாதுகாப்புத்தன்மையிலும் போதிய கவனம் செலுத்த வில்லை. இதனால், இலகு வர்த்தக வாகனங்கள், தரமின்றி வாகனங்களாக நுகர்வோர்கள் கருதினார்கள்.

தூங்பெஃங் பெக்கோட் வாகனம்

இந்த நிலைமை, மாற்றியுள்ளது. தற்போது, சீனாவின் வாகன தொழில் நிறுவனங்கள், இலகு வர்த்தக வாகனங்களின் தரத்தில் கவனம் செலுத்தியுள்ளன. முன்பு, உயர் தரமிக்க வாகனங்களில் காணப்படும் சில கருவிகள், இலகு வர்த்தக வாகனங்களுக்கு எடுத்துவைக்கப்பட்டன. உண்மையில், இது, எதிர்காலத்தில், சீன இலகு வர்த்தக வாகனங்களின் வளர்ச்சி போக்கு ஆகும் என்று தாங் தெங் தெரிவித்துள்ளார்.

தியான் சின் முதலாவது வாகனத்தயாரிப்பு நிறுவனம், இது, இலகு வர்த்தக வாகனங்களை முக்கியமாக தயாரிக்கிறது. கடந்த ஆண்டில் இத்தொழில் நிறுவனம் தயாரிக்கும் சியாலி என்ற சிறிய ரக வாகனங்களின் விற்பனைத்தொகை, 2 லட்சத்தைத் தாண்டி, வாகனச் சந்தையில், 30 விழுக்காடு இடம் வகித்தது. எதிர்காலத்தில், தரத்தை மேலும் உயர்த்தினால், மேலும் அதிகமானோர், இலகு வர்த்தக வாகனங்களில் ஆர்வம் காட்டுவார்கள் என்று இந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் வாங்காங் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

உயர் நிலை வாகனத்தின் செயல் திறனை அடைய பாடுபடுவோம். எமது பயன்படுத்துவோர்கள், இந்த சிறிய வாகனத்தை வாங்கினால், தங்களது தேவையை நிறைவு செய்வதோடு, செலவு குறைவு, எரியாற்றல் சிக்கனம், சுற்று சூழல் பாதுகாப்பு முதலிய நோக்கங்களும் நிறைவேறும் என்றார் அவர்.

இவ்வாண்டில், சீனா, வாகன நுகர்வு வரியைத் சீர்த்திருத்தி, இலகு வர்த்தக வாகனங்களின் நுகர்வு வரியைக் குறைக்கும் என்று, சீன வாகனத்தொழில் சங்கத்தைச் சேர்ந்த நிபுணர் கமிட்டியின் துணைத் தலைவர் ரோங் ஹுவெ காங் கூறினார்.

இவ்வாண்டில் இலகு வர்த்தக வாகனங்களின் வளர்ச்சிக்கு ஆதரவாக பல கொள்கைகள் வெளியிடப்படும். எதிர்காலத்தில், நுகர்வு வரி சில கட்டங்களாக பிரிவுக்கப்படும். இலகு வர்த்தக வாகனங்களின் வரி குறைவாக இருக்கும் என்றார் அவர்.

ஐரோப்பிய நாடுகளிலும், ஜப்பான், தென்கொரியா முதலிய நாடுகளிலும், இலகு வர்த்தக வாகனங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த நாடுகள், முன்னுரிமைக் கொள்கையை வகுத்துள்ளன. இலகு வர்த்தக வாகனங்களும், பாதைக் கட்டுப்பாடு கிடையாது என்பது மட்டுமல்ல, நுகர்வு வரி, இயக்கச் செலவு ஆகியவற்றிலும் சலுகையை அனுபவிக்கலாம் என்று தெரிய வருகிறது. ஆனால், சீனாவில், தற்போது, மாசுபடுத்தாத இலகு வர்த்தக வாகனங்களின் விற்பனை, மொத்த விற்பனை அளவில் 20 விழுக்காடாகும். ஐரோப்பிய நாடுகளில் சுமார் 70 விழுக்காட்டு விகிதத்தை விட மிகவும் குறைவு. இதனால், இவ்வாண்டில், இலகு வர்த்தக வாகனங்கள் சீனாவின் வாகனச் சந்தையில் முக்கிய இடம் வகிப்பதாக, ரோங் ஹுவே காங் கருத்து தெரிவித்தார்.

இவ்வாண்டில், சீனாவின் வாகன விற்பனை, 12 விழுக்காடு அதிகரிக்கும். ஆண்டு முழுவதிலும், வாகன விற்பனை அளவு, 64 லட்சத்தைத் தாண்டும். இலகு வர்த்தக வாகனங்களின் மீதான கட்டுப்பாடு நீக்கப்படும் முன்நிலையில், இலகு வர்த்தக வாகனங்கள், சீனாவின் வாகனச் சந்தையில் மேலும் கூடுதலான இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.