• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-21 09:42:35    
முரண்பாடுகள்

cri
மூன்றாவது காலகட்டமாக, 16ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை சீனாவுக்கு வந்த கத்தோலிக்கப்பாதிரிகள் ஹான் இன மக்கள் பலரை கிறிஸ்தவத்திற்கு மதம்மாறச் செய்தனர். இவ்வாறு மதம் மாறியவர்களில் முக்கியமானவர் Xu Guang Qi என்ற பெயர் கொண்ட சீனத் தலைமை அமைச்சர். ஆனால் பற்பல காரணங்களால் இவர்களின் செல்வாக்கு தொடரவில்லை.

நான்காவது கால கட்டமாக, 19ஆம் நூற்றாண்டின் பிற்காலத்தில் மேற்கத்திய காலனி ஆட்சியாளர்களின் வருகையால் சீனாவில் கிறிஸ்தவம் புத்துயிர் பெற்றது.

ஆனால், புராணக் கதைகளும், வரலாறும் என்றைக்குமே ஒத்துப் போனதில்லை. சீனாவில் கிறிஸ்தவமும் இதற்கு விதிவிலக்கல்ல. சீனாவுக்குள் கிறிஸ்தவம் எப்போது நுழைந்தது என்பது குறித்து, புராணக் கதைகளில் இருந்து வரலாற்று ஆசிரியர்கள் வேறுபடுகின்றனர். இயேசு கிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தாமஸ், ஜெரூசலேமில் இருந்து பாபிலோனுக்குச் சென்று அங்கிருந்து இந்தியாவுக்கு வந்ததாக ஒரு புராணக்கதை கூறுகிறது. அவர் இந்தியாவின் தென் மேற்குக் கடற்கரையில் உள்ள கொடுங்காளூர் எனப்படும் கண்ணூரில் தரை இறங்கினார். அங்கிருந்து சீனாவுக்கு வந்து விட்டு, கி.பி. 72ஆம் ஆண்டில் இந்தியாவிற்குத் திரும்பியதும் கொல்லப்பட்டார். அவர் நினைவாக சென்னையில் பரங்கிமலை எனப்படும் தாமஸ்மவுண்ட் இப்போதும் இருக்கிறது. புனித தாமஸின் சீனப் பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்பதற்கான ஆதாரங்களை இயேசு திருச்சபையைச் சேர்ந்த ஜே. சவேரியானா (1506-62), மாத்யூ ரிச்சி (1552-1610) என்ற இரண்டு செல்வாக்குமிக்க இரண்டு பாதிரிகள் தங்களது புத்தகங்களில் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் சொல்லும் ஆதாரங்களில் ஒன்றுதான் வேங் கண்டறிந்த 10 கல் வெட்டுச் சித்திரங்கள்.

ஆனால், இவை கண்டுபிடிக்கப்பட்ட கல்லறை இருந்த ச்சுஸோ நகரம் மிகவும் உள்ளடங்கி இருக்கிறது.

கிறிஸ்தவப் பாதிரிகள் அந்த நகருக்கு வந்தார்கள் என்பது உண்மையானால், வழியில் உள்ள எந்த நகரத்திலும் கிறிஸ்தவத் தடயம் எதுவுமே கிடைக்க வில்லையே! ஏன்? என்று வினா எழுப்புகின்றனர் வரலாற்று ஆசிரியர்கள். ஆகவே முதல் நூற்றாண்டிலேயே சீனாவுக்கு கிறிஸ்தவம் வந்து விட்டது என்பது நம்பக் கூடியதாக இல்லை என்கிறார் Tong Xun என்ற பெய்ஜிங் ஒன்றியப் பல்கலைக்கழகப் பேராசிரியர்.

ஆனாலும், வேங்கின் கண்டுபிடிப்பை வரலாற்று ஆசிரியர்கள் தீவிரமாக ஆராய்ந்து, உண்மை காணும் போது, உலக வரலாற்றைத் திருத்தி எழுத வேண்டியிருக்கலாம்.