ராஜா....... காய்கறி உருண்டை தயாரிப்புக்கு தேவையான பொருட்கள் பற்றி சொல்லினோம். இப்போது அதை தயாரிக்கும் முறை பற்றி சொல்லலாமா?
கலை.....முதலில் உருண்டை எப்படி சமைப்பது பற்றி கூறுகின்றேன். உருளை கிழங்கின் தோலை உரித்துவிட்டு சிறுசிறு துண்டு துண்டுகளாக நறுக்கி இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்ததும் சில நிமிடங்கள் ஆற விட வேண்டும். பிறகு கரண்டியால் மசிக்க வேண்டும்.
ராஜா......மாவு போல மசிந்து விட்டது. இனி மற்ற பொருட்களை எப்படி உள்ளே போடுவது?
கலை.....காளான், சுவையான பச்சை கீரை இலை ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்க வேண்டும். பின் மாவான உருளை கிழங்குடன் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதில் மக்காச் சோளத்தையும் மறக்காமல் போட்டு மற்ற பொருட்களுடன் சேர்த்து பிசைய வேண்டும். பின் உருண்டையாக தனித்தனியாக உருட்ட வேண்டும்.
ராஜா....முட்டை சொன்னீங்க. இதில் முட்டைக்கு என்ன பயன். இது பற்றி குறிப்பிட வில்லையே.
கலை..... முட்டையா?அதை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி, சிறிது தண்ணீரும் உப்பும் கலந்து நன்றாக அடிக்க வேண்டும். ஆம்லெட்டுக்கு கலப்பது போல பிறகு இந்த முட்டைக் கலவையை இட்சி தட்டில் ஊற்றி ஆவியிலே வேகவிடனும். அப்போது அடுப்பில் தீ மெதுவாக எரியட்டும். இட்லி போல முட்டை வெந்ததும். அதன் மீது தட்டில் உள்ள காய்கறி உருண்டைகளை வைத்து மேலும் 10 நிமிடம் வேகவிடணும். பிறகு வெளியே எடுத்து உருண்டைகள் மீது கீலைகளைத் தூவி பலிமாறுங்கள்.
ராஜா.....மஞ்சள் நிற முட்டைக் கேக்கின் மீது காளானும் மக்காச் சோளமும் கலந்த உருளைக் கிழங்கு உருண்டையும் அதந் மீது பச்சை நிற கீரையும் சேர்ந்து ஒரே வண்ணக் கோலமாக இருக்கும் இல்லையா?
கலை.....நீங்கள் சொன்னது சரிதான். இதை சமைத்துப் பாருங்கள். சுவைத்து மகிழுங்கள்.
ராஜா..... நண்பர்களே இன்றைய உணவு அரங்கத்தில் கற்றுக் கொண்ட காய்கறி உருண்டை தயாரிப்பு முறையை பயன்படுத்தி தங்கள் வாழ்க்கையை இனிமையாக்குங்கள்.
|