முதலில் சீனாவின் குவாங்சோ நகரில் பணியாற்றும் ஆர். ரவிச்சந்திரன் அனுப்பிய கவிதை வருகின்ற நாட்களனைத்தும் உன் ஷிகாய் பிறப்பெடுக்கும் அப்போது பூமி மட்டும் பூக்களை உனக்காகவே பூக்க வைக்கும். காற்றைப் போல் பொதுவாய் சிரிப்பைப்போல அழகாய் மொத்த பூமியையும் சத்தமில்லாமில்லாமல் ஆட்சி செய்ய சமத்துவ தலைமையேற்கும் சகோதரம் வேண்டும். அடுத்து சேலம் செவ்வாய்ப் பேட்டை நேயர் கே. பாலாஜியின் கவிதை. நாயாண்டில் காலடிவைக்கும் நலமிகு புத்தாண்டே நன்மைமிகு புத்தாண்டே எனதினிய நாட்டை சீனாவை காக்கபபோகும் நல்லெண்ணம் பரப்பப்போகும் நன்றிமிக புத்தாண்டே வருக. வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து கவிஞர் அறிவுச்சுடர் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன. இது போன்ற நிகழ்ச்சிகள் தான் சீன வானொலியின் கரத்தை உயர்த்துகின்றன என்கிறார். திருச்சி அண்ணாநகரில் இருந்து ஆர்.சாந்தி கடந்தசில வாரங்களாக மத்திய அலைவரிசை 600 மற்றும் 700 மீட்டருக்கு இடையில் காலை மணி 7:30 முதல் சீன ஒலிபரப்புக் கேட்கின்றது என்கிறார். சீனப் பல்கலைக்கழகத்தில் தமிழ்கற்கும் மாணவர்களின் புத்தாண்டு வரை இனிமையாக இருந்தது என்கிறார். ஈரோடு மாவட்டம். எஸ்.கே. பாப்பம்பாளையம் நேயர் பிடி. சுரேஷ்குமார் டிசம்பர் 12 சீன உணவு அரங்கம் பற்றி எழுதியுள்ளார். மிளகாய் என்றாலே அரண்டு போதும் எங்களுக்கு மிளகாய் சாஸும் மீனும் கலந்த புதுவகை உணவை அறிமுகப்படுத்தியது நன்றாக இருந்தது என்கிறார். பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பள்ளம் நேயர் இரா, மருகபாண்டியன் நேயர் நேரம் நிகழ்ச்சி சிற்பபாக இருந்தது. நேருக்கு நேர் நிகழ்ச்சியில் சு.கலைவாணன் ராதிகாவின் அனுபவம் நிறைந்த உரை பயனுள்ளதாக இருந்தது என்கிறார். பெரம்பலூர் மாவட்டம் சின்னவளையம் கு.மாரிமுத்து, சீனாவில் தமிழ் மொழி பயிலும் மாணவர்கள் அனைவரும் நன்றாகப் படித்துத் தேர்ச்சிபெற வாழ்த்துகின்றார். பண்டிச்சேரி வி. கோவிந்தராஜ், சைவமா, அசைவமா என்ற நிகழ்ச்சி சுவையான பல செய்திகளைத் தந்தது. சீனக் குட்டிக்கதைகளும் மலர்ச்சோலையும் நன்றாக இருந்தன என்று கூறுகின்றார். குற்றவாளிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்குவது சரியா என்று கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் மிக நன்றாகத் தொகுத்துக் கூறப்பட்டது என்கிறார். ஏ.எஸ்.சேசுராஜ் கடிதத்தாளில் முகவரி இல்லை பல நிகழ்ச்சிகளும் நன்றாக உள்ளன என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் மேலப்பாளையத்தில் இருந்து கே. எஸ். தங்கப்பாண்டியன், டிசம்பர் 24 உங்கள் குரல் நிகழ்ச்சியில் சிற்பான தகவல்கள் தெரிவிக்கப்பட்டன என்கிறார். மும்பை சுகுமார் டிசம்பர் கடைசி வார நிகழ்ச்சிகள் பற்றிய கருத்து எழுதியுள்ளார். கடல் கொந்தளிப்புக்குப்பின் தமிழ்நாடு பற்றிய பேட்டியுடன் செய்தித் தொகுப்பு அளித்தது நன்றாக இருந்தது என்கிறார். உலகச் செய்திகளை நாடுவாரியாக சில வரிகளில் சொல்லுங்கள் தினமும் மன அமைதி தரும் இசை ஒலிபரப்புங்கள் என்று யோசனை கூறுகின்றார்.
|