• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-22 17:21:50    
ஹைனாவில் கொல்ப் சுற்றுலா

cri

தற்போது தென் சீனாவின் ஹைனான் தீவில் ஹைகொ மற்றும் சான்யா சர்வதேச விமான நிலையங்களில் தென் கொரியா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் மற்றும் வட்டாரத்தைச் சேர்ந்த பயணிகள் கொல்ப் விளையாட்டு ஆடையை அணிந்துகொண்டு, கொல்ப் விளையாட்டுக் கருவிகளுடன் கூடிய பெரிய பைகளைத் தூக்கிக்கொண்டு திரிவதைக் காணலாம்.
அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் பல்வேறு பெரிய கொல்ப் விடுமுறை ஹோட்டலுக்கு விரைகின்றனர். கொல்ப் விளையாட்டுக்காகவே அவர்கள் ஹைனான் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று கூறலாம்.

இந்நிகழ்ச்சியில், கொல்ப் சுற்றுலா பற்றி கூறுகிறோம். அதாவது, ஹைனான் மாநிலத்தின் ஹைகொவிலிருந்து புறப்பட்டு, சுற்றுலா தலமான சான்யா வழியாகச் சென்றால் இறுதியில் சிறிய போ ஓ நகர் வரும். கொல்ப் விளையாட்டு சீனாவில் தாமதமாகத் துவங்கிய போதிலும், கடந்த சில ஆண்டுகளாக அது விரைவாக வளர்ந்துவருகின்றது.
தற்போது சீன பெருநிலப்பகுதியில் குவாங்துங், பெய்ச்சிங், சாங்ஹைய், ஹைனான் ஆகிய இடங்களில் சுமார் 200 கொல்ப்த் திடல்கள் உள்ளன. கடந்த டிசெம்பர் திங்கள் பிற்பகுதி முதல் வட சீனாவில் பல இடங்கள் உறைபனியால் மூடப்பட்டிருக்கின்றன. தென் சீனாவின் வசந்த நகரம் என்று அழைக்கப்படும் குவன்மிங்கிலும் கூட வெப்ப நிலை சுமார் 7 அல்லது 8 திகிரி செல்சியஸாகக் குறைந்தது.
ஆனால்,தென் சீனாவின் ஹைனான் தீவில், ஆண்டுக்குச் சராசரி வெப்பநிலை சுமார் 20 திகிரி செல்சியஸாகும். கொல்ப் விளையாட விரும்பும் பயணிகளுக்குத் தற்போது ஹைனான் மாநிலத்தில் கொல்ப் விளையாடுவது பொற் காலம் என்று கூறலாம்.

சீன சர்வதேச சுற்றுலா துறையின் அதிகாரி சியுச்ஹொன் கூறியதாவது, ஹைனான் தீவு சிறியதாக இருந்த போதிலும், 21 கொல்ப்த் திடல்கள் உள்ளன. இங்கு ஆண்டின் 4 பருவங்களிலும் வெப்ப நிலை 20 திகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது.

குளிர் காலத்தில் கொல்ப் விளையாட முடியாது என்ற நிலைமை இல்லை. தற்போது பயணிகளில் பெரும்பாலோர் விமானம் மூலம் ஹைகொவ் மற்றும் சான்யா செல்கின்றனர். ஹைகொவின் சுற்றுப்புறத்தில் 14,15 கொல்ப்த் திடல்களும் சான்யாவின் சுற்றுப்புறத்தில் 5,6 கொல்ப்த் திடல்களும் உள்ளன.
ஹைனானிலுள்ள கொல்ப்த் திடல்களின் நுழைவுச் சீட்டு கட்டணம், ஆண்டின் 4 பருவங்களிலும் மாறாமல் இருப்பது பயணிகளுக்கு ஏற்றது என்றார். இதைக் கேட்ட நீங்கள் கொல்ப் விளையாட ஆசைப்படுகிறீர்களா?
அப்படியானால், நாம் சேர்ந்து செல்லலாமா? சீன பெருநிலப்பகுதியின் தென் முனையில் அமைந்துள்ள ஹைனான் தீவு, சீன தைவானுக்கு அடுத்த படியாக 2வது பெரிய தீவு.

அதன் நிலப்பரப்பளவு சுமார் 34 ஆயிரம் சதுர கிலோ மீட்டர். ஹைனான் தீவின் வட கிழக்கு முனையில் அமைந்துள்ள ஹைகொவ் நகரம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு துறைமுகமாக இருந்தது.
அங்குள்ள வெப்ப மண்டலத்தில் இருப்பதால் தற்போது, தென் சீனாவின் முக்கிய சுற்றுலா நகரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

ஹோட்டலில் தங்கியிருக்கும் பயணிகளில் மிக பெரும்பாலோர் கொல்ப் விளையாட விரும்புகின்றனர்.
அவர்கள் ஹைகொவ் நகரிலுள்ள புகழ்பெற்ற 5 நட்சத்திர ஹோட்டலிலிருந்து புறப்பட்டு, சுமார் 20 நிமிடத்திற்குப் பின் இந்நகருக்கு அருகிலுள்ள 2 பெரிய கொல்ப்த் திடல்களை அடைகின்றனர்.