Caiqinயின் பாடல்களை உலகெங்கும் உள்ள சீனர்கள் ஈர்க்கின்றன. அவருடைய குரல் இனிமையானது, திறமையாகப் பாடுகிறார். இன்று அவருடைய இனிமையான பாடலுடன், Caiqing பற்றி விளக்கி கூறுகிறேன். இயற்கையிலேயே இனிமையான மக்களை ஈர்க்கும் குரலில், ஆழ்ந்த உணர்வுடன் சைஜிங் பாடல் பாடும் பாணி, பல ரசிகர்களை ஈர்க்கின்றது. அவருடைய பாடலில், pop இசையின் ஆத்மா நெருங்கி வருகிறது என்கின்றனர் சிலர். தவிரவும், அவருடைய பாடலில், பல ஆண்டுகளாக அருமையாக பாடமாகவும் திகழ்கிறது. சில இசை கருவி தமது இசை வாங்க விரும்புகிறவர்கல். தமது இசை கருவி நல்லதா இல்லையா என்பதை Caiqingயின் CD மூலம் பயன்படுத்திபார்க்க விரும்புகின்றனர். இப்போது நீங்கள் கேட்டுக்கொண்டிருக்கும் பாடல், ஹாங்காங்கின் புகழ்பெற்ற திரைபடத்தில் இடம் பெற்ற, வாய்ப்பு இல்லை எனும் பாடலின் முக்கிய வரியாகும். இரு முத்தியவர்களுக்கு இசை பிடிப்பதால், அவர்கள் சேர்ந்து உட்கார்ந்து, Caiqingயின் பாடலை கேட்டுக்கொண்டிருந்தனர். உயர் இசை இனிமையானது, நடுத்தர இசை, சரியானது, கீழ் இசை நிதானமானது. பொதுவாக கூறின், மிக நல்லது என்று அவர்களில் ஒருவர் மதிப்பிடுகின்றார்.
இது, பல ஆதரவாளர்களின் மதிப்பு ஆகும். சீன மொழி பாடல் அரங்கில் நிலையான பசுமை மரமாக சைஜிங் பாராட்டபடுகிறார். அவளுடைய பாடல் வளர்ப்பு வரலாறு மிக அற்புதமானது. பல்கலைகழகத்தில் முதலாவது வகுப்பில் பயின்று போது பள்ளி பாடல் மிக பரவலாக இருந்தது.
ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு கிடார் இருந்தது, Caiqing கிடார் வாங்க விரும்பினார்.. கிடார் வாங்கிய போது, ஒரு விளம்பர படத்தை பார்த்தார். அது ஒரு பாடல் போட்டி பற்றிய விளம்பரம். போட்டியில் முதல் 5 இடங்களை வென்றால் கிடார் வழங்கப்படும் என்று விளம்பரம் கூறியது இப்போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற பின் கிடார் கிடைக்கலாமே, எனவே கிட்டார் வாங்கும் பணத்தை செலவழிக்க என்று எண்ணி சைஜிங் இப்போட்டியில் கலந்துக் கொண்டார். இந்த போட்டியை இசைத்தட்டு தொழில் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இப்போட்டி மூலம், பாடகி அல்லது பாடகர் தேர்தெடுக்கப்படலாம். துவக்கத்தில் பணச் சிக்கனத்தை விரும்பிய நான், இறுதியில், பணத்தை சம்பாதிப்பவராக மாறி விட்டேன் என்றார். கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளில், துவக்கத்தில் caiqing நாட்டுப்புற பாடல் பாடினார்.
80ம் ஆண்டுகளில், POP பாடல்பக்கம் திரும்பினார். அப்போது, புதிய பாடல் அடிக்கடி தோன்றியுள்ளன. அவர் வெளியிட்ட CD எண்ணிக்கை 40க்கு மேலாகும். தைவான் jingding பரிசு, jingqu பரிசு, ஹாங்காங் 10 பெரிய முக்கிய பாடல்கள் பரிசு முதலிய பரிசுகளை அவர் பெற்றுள்ளார்.
|