
அருவி
சியு ச்சாய்கொ, உலக இயற்கை மரபுச் செல்வமாகும். சியு ச்சாய்கொவிலுள்ள நீர் எழில் மிக்கது. ஈடிணையற்றது. பளிங்கு போன்றது. வண்ண நிறமுடையது. சுமார் 620 சதுரக் கிலோமீட்டர் பரப்பளவுடைய சியு ச்சாய்கொவில் ஆட்கள் குறைவு. நவீனமாக்கத்தின் பாதிப்பு இல்லாமல் இயற்கை காட்சி அழகு ஆரம்ப நிலையிலேயே உள்ளது.

பளிங்கு போன்ற நீர்
இவ்விடத்தில் நுழைந்த பின் காணக் கூடிய இடங்கள் எல்லாம் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும். பச்சை நிற மலைகள், அமைதியான நீர், மரப்பலகைகளால் போடப்பட்ட நீளமான குறுகிய பாதைகள், மலையில் உலா போகும் வெண்ணிற மேகக் கூட்டங்கள் முதலியவை கண்ணைக் கவர்கின்றன.

அழகான காட்சி
இங்குள்ள நீர் பயணிகளை வியப்படையச் செய்யக் கூடியது. சில சமயத்தில் இந்நீர், நீலமணிக் கல் போல நீல நிறமுடையது. சில சமயத்தில், பச்சைக் கல் போல பச்சை நிறமுடையது.
|