
குளிர்ச்சியான கல்குகை
சியாமன் நகரம், சீனாவின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. அதைச் சுற்றியுள்ள 3 பக்கமும் கடற் பிரதேசங்களாகும். அங்கு போக்குவரத்து, மிகவும் வசதியாக உள்ளது. கப்பல் , தொடர்வண்டி, விமானம் மூலம் அங்கு சென்றடையலாம். இவற்றில், விமானப் போக்குவரத்து குறிப்பிடத் தக்கது.

குலான்யு தீவு
பெய்ஜிங், சாங்காய், குவாங்சோ, சிங்தௌ போன்ற பெரிய நகரங்களிலிருந்து, 2 மணி நேரத்தில் விமானம் மூலம் அங்குச் செல்லலாம். டோக்கியோ, பாங்கொக், சிங்கப்பூர், சியோல் ஆகியவற்றிலிருந்து,சியாமன் நகருக்கு விமானப் போக்குவரத்து உண்டு. நகரப் பகுதியிலிருந்து, சுமார் 20 நிமிடத்தில், சியாமன் நகரின் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்ல முடியும்.

ஹோட்டல்
அங்கு, போக்குவரத்து வசதி அதிகம். நன்புதொ, வான்ஷி மலை தாவரப் பூங்கா போன்ற காட்சித் தலங்களில், பேருந்து நிலையம் உண்டு. வாடகை காரின் கட்டணம், மிகவும் குறைவு. உறைவிட வசதி மக்கது சியாமன் நகர்.
|