
இன்று காலையில் தென் சீனாவின் Xia Men நகரில் நடைபெற்ற சர்வதேச மரதன் போட்டியில், சீன வீராங்கணை Sun Wei Wei, தங்க பதக்கத்தை பெற்றார். அவர், 2 மணிக்கு 26 நிமிடம் 32 வினாடியில் தூரத்தை ஓடி முடித்தார். சீன வீராங்கணை Zhu Xiao Lin மற்றும் Jin Man இரண்டாவது இடமும் மூன்றாவது இடமும் வகித்தனர். ஆடவர் போட்டியில், சீன வீரர் Deng Hai Yang, 2 மணிக்கு 10 நிமிடம் 50 வினாடி என்ற சாதனையுடன் மூன்றாவது இடம் பெற்றார். மரதன் போட்டியில் சீன வீரர் பெற்றுள்ள மிக நல்ல சாதனை இதுவாகும். கெனீயாவின் Kamar மற்றும் Kipkorir முதலிடமும் இரண்டாவது இடமும் பெற்றனர். இவ்வாண்டின் போட்டியில், 39 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுமார் 20 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர்.
|