
சீன சர்வதேச காலத்துக்கு ஏற்ற ஆடை வாரம் இன்று பெய்சிங்கில் துவங்கியது. 24 நாடுகள் மற்றும் பிரதேசங்களிலிருந்து வந்துள்ள 120க்கும் அதிகமான, காலத்துக்கு ஏற்ற ஆடை வடிவமைப்பு வல்லுநர்கள், தத்தமது புதிய படைப்புகளைக் காண்பிப்பார்கள். இவ்வாண்டில் இலையுதிர்கால, குளிர்கால ஆடைகளின் புழக்க போக்கு இவ்வாரத்தில் வெளியிடப்படும். ஒரு வாரம் நீடிக்கும் இந்நாட்களில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ் பெற்ற வணிக உரிமம் உடைய நிறுவனங்கள் சிறப்பு அறிவிப்பு கூட்டங்களை நடத்தும். உலக ரீதியான இளைஞர் ஆடை வடிவமைப்பு வல்லுநர்களின் படைப்புகள் பற்றிய போட்டியும், இதர சிறப்பு போட்டிகளும் அதே வேளையில் நடைபெறும்.
|