கககலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நேரம். ராஜாராம், கலையரசி இருவரும் இந்த நிகழ்ச்சியில் வெங்காய வடை தயாரிப்பு பற்றி கூறுகின்றார்கள்.
ராஜா.....கலை நீங்கள் வெங்காய வடை தயாரிப்பு என்று சொன்னதுமே எனக்கு மிகுந்த மிகிழ்ச்சி. ஏனென்றால் வெங்காயம் தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக கருதப்படுகின்றது.
கலை... எனக்கு தெரியும் பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், தாள் வெங்காயம் என்று பல வகை வெங்காயங்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. அப்படித்தானே.
ராஜா....ஆமாம். வெங்காயம் இல்லாமல் தமிழரின் சமையலறை இயங்க முடியாது.
கலை....சரி. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடலாம். காய்கறியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். இன்று நாம் வெங்காயத்தை ஒரு சிற்றுண்டியாக சாப்பிடப் போகிறோம்.
ராஜா...சீக்கிரமாக சொல்லுங்கள். நண்பர்கள் வெங்காய வடை தின்ன காத்திருக்கிறார்கள்.
கலை....சொல்கின்றேன். வெங்காய வடை தயாரிப்புக்குத் தேவைப்படும் பொருட்களை முதலில் சொல்கின்றேன். கவனமாக கேளுங்கள்.
கோதுமை மாவு 60 கிராம். முட்டை ஒன்று. தண்ணீர் அல்லது பீர் அரை தம்ளர். சமையல் சோடா, ஒரு தேக்கரண்டி. மிளகு கால் தேக்கரண்டி, உப்பு சுவைக்கு ஏற்ப.
ராஜா....பல்வகை பொருட்கள் சொன்னீர்கள். முக்கிய பொருள் வெங்காயம் எவ்வளவு சொல்லலையே.
கலை....கவலைபடாதீர்கள். இது சீன செங்காய வடை ஆகவே பீரும் முட்டையும் தேவை. வெங்காயம் பெரிதா சிறிதா என்பது முக்கியமில்லை. ஒரு வெங்காயம் கொண்டு இருண்டு வடை சுடலாம். வெங்காயத்தின் அளவைப் பொறுத்து எண்ணிக்கை நான் கூறிய பொருட்கள் இரண்டு வெங்காய வடை சுருவதற்கு போதும்.
ராஜா....எனக்கு புரிந்தது. என்னை போன்ற ஒரு ஆளுக்கு ஒரு வெங்காயம் போதும். அல்லவா?
கலை....ஆமாம்.
|