• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-27 17:27:51    
மடிக்கவல்ல கார்

cri
திருமணம் பற்றி

திருமணமாகி குழந்தை பெற்ருக்கொள்வதற்கு முந்தைய காலம் மிகவும் இன்பமான திருமண காலமென அமெரிக்க அறிவியலாளர்கள் ஆராய்ந்த பின் முடிவுக்கு வந்துள்ளார்கள். திருமணத்துக்குப் பிந்திய 7வது ஆண்டாவது திருமணம் நீடித்திருக்க முடியுமா முடியாதா என்பதன் தீர்க்கமான காலக்கட்டமாகும் என்று பொதுவாக கருதப்படுகிறது. ஆனால் உண்மை அப்படியில்லை. திருமணமாகி பத்து ஆண்டுகளுக்குப் பின் தான் மக்களின் இன்ப உணர்வு மிகவும் தாழ்ந்த கட்டத்தில் இருக்கும். அப்போது திருமண நெருக்கடி எளிதில் தோன்றும்.

மடிக்கவல்ல கார்

அண்மையில் மடிக்கவல்ல புதிய ரக மின்சார கார் ஒன்று அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மஸாசூஸட்ஸ் மாநிலத்தின் பொறியியல் கல்லூரியின் சிவில் பிரிவு ஆய்வு குழுவால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட இவ்வகை காரில் இரு இருக்கைகள் உண்டு. "சக்கர வடிவ இயந்திர மனிதர்"எனப்படும் சாதனம் அதை இயக்குகின்றது. இந்தச் சாதனத்தில் பொருத்தப்பட்ட சக்கரங்கள் தனித்தனி அமைப்பாக அமைந்துள்ளன. உட்புறத்தில் மின்சார மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. சக்கரங்கள் 360 கோணங்களில் திரும்பக்கூடியவை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

செயற்கை விழித்திரை

ஜப்பானிய ஆய்வாளர்கள் அண்மையில் செயற்கை விழித்திரையை பார்வை இல்லாத கண் மணிக்குள் வெற்றிகரமாக போட்டார்கள். இதனால் பார்வையற்றோர் மீண்டும் கண் பார்வை பெற்றுள்ளார். ஆய்வாளர் 3 மிலி மீட்டர் அளவுடைய 9 விழுப்பொன் மின் வாய்களைக் கொண்ட இந்தச் செயற்கை விழித்திரை குருடனின் கண்மணிக்குள் சேர்த்துள்ளார். புற மின்னாற்றல் சேர்க்கப்பட்டு மின்னோட்டம் குருடனின் செயற்கை விழித்திரையின் ஒவ்வொரு மின்வாயையும் எட்டியதும், விழித்திரையின் ஒளி குறியீடுகள் விழி நரம்புக்கு அனுப்பப்படுகிறன. இதனால் குருடர்கள் கண் பார்வையை பெற முடிந்தது.