• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-06 18:31:59    
சான்யா கொல்ப்த் திடல்

cri

சான்யா காட்சித் தலம்

சான்யா காட்சித் தலம் கடந்த சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சியில் ஹைனாவில் கொல்ப் சுற்றுலா பற்றி கூறினோம். இது பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? இன்று சான்யா கொல்ப் திடலும் காட்சித் தலமும் பற்றி அறிமுகப்படுத்துகிறோம்.

தற்போது சீன பெருநிலப்பகுதியில் குவாங்துங், பெய்ச்சிங், சாங்ஹைய், ஹைனான் ஆகிய இடங்களில் சுமார் 200 கொல்ப்த் திடல்கள் உள்ளன.கொல்ப் விளையாட்டுக்காகவே பயணிகள் ஹைனான் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

அவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் பல்வேறு பெரிய கொல்ப் விடுமுறை ஹோட்டலுக்கு விரைகின்றனர்.காட்சித் தலம் ஹைகொவின் சுற்றுப்புறத்தில் 14,15 கொல்ப்த் திடல்களும் சான்யாவின் சுற்றுப்புறத்தில் 5,6 கொல்ப்த் திடல்களும் உள்ளன.

காட்சித் தலம்

ஹைகொவுடன் ஒப்பிடும் போது சான்யாவிலுள்ள கடற்கரை மேலும் அழகு. அத்துடன், கொல்ப்த் திடலின் நுழைவுச் சீட்டு விலை சற்று குறைவு. இவ்விடத்திற்குப் பல முறை வந்து கொல்ப் விளையாடிய ஈமிங் கூறியதாவது,

இங்குள்ள கொல்ப்த் திடல், அமெரிக்காவின் கொல்ப்த் திடல் வடிவமைப்பாளர்களால்தயாரிக்கப்பட்டது. இயற்கையான புவிநிலைக்கு ஏற்ப வரைந்து அமைக்கப்பட்டிருப்பது அதன் தனிச்சிறப்பு. மிகவும் அமைதியான, வசதியான சூழ்நிலையில் கொல்ப் விளையாடுவதற்கு இது துணை புரிகின்றது என்றார்.

100 ஹெக்டர் பரப்பளவுடைய இந்த கொல்ப்த் திடல், சீனாவின் மிக தென் முனையில் அமைந்துள்ள கொல்ப்த் திடல்களில் ஒன்றாகும். சான்யா கொல்ப் திடல்கொல்ப் விளையாட விரும்புவோரைப் பொறுத்தவரை, மலை, கடல் காட்சி, பாலை வனம் ஆகிய காட்சிகளுடன், அடர்ந்த ரப்பர் மரங்களிடையில் மகழ்ச்சியுடனும் திறமையுடனும் கொல்ப் விளையாடலாம். பயணிகள் கொல்ப் விளையாடுவது தவிர, காட்சித் தலங்களையும் பார்வையிடலாம்.

சான்யா கொல்ப் திடல்

எடுத்துக்காட்டாக, சான்யாவுக்கு அருகிலுள்ள தியெயாஹைச்சியௌ காட்சித் தலம், வெந்நீருற்று விடுமுறை மண்டபம், அரசு வனப்பூங்கா முதலிய பல இடங்கள் குறிப்பிடத் தக்கவை.

சான்யாவிலிருந்து புறப்பட்டு, சுற்றுலா மேற்கொள்ளும் இறுதியான இடம் ஹைனான் மாநிலத்தின் சிறிய நகர் போ ஓ தான். ஹைனான் தீவின் கிழக்கு கடல் கரையில் அமைந்துள்ள போ ஓ நகரம், துவக்கத்தில் ஒரு சிறிய நகராக இருந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஆசிய போ ஓ கருத்தரங்கு ஆண்டுதோறும் இந்நகரில் நடைபெறுவதால், இந்நகரம் புகழ்பெற்றுள்ளது. காட்சித் தலம்போ ஓ கொல்ப் கிராம கிளப்பும் போ ஓ நகருடன் புகழ்பெற்றது. இக்கிராம கிளப், போ ஓ நகரைச் சேர்ந்த 80 ஹெக்டர் பரப்பளவுடைய ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது.

காட்சித் தலம்

ஆசியாவில் ஒரே ஒரு தீவு வடிவமுடைய, லிங்க்ஸ் (LINKS) பாணியில் கட்டப்பட்ட கொல்ப்த் திடல் இது. கருத்தரங்கில் கலந்துகொள்ள, ஆண்டுதோறும் போ ஓவுக்கு வருகை தரும் சில நாடுகளின் அரசு தலைவர்கள் உட்பட, ஆசிய நாடுகள் மற்றும் வட்டாரங்களைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகளில் பலர், கருத்தரங்கின் இடைவேளையில், கொல்ப் விளையாடுவதுணடு. 

ஆஸ்திரேலியாவின் முன்னாள் தலைமையமைச்சர் BOB HAWK, முன்னாள் ஜப்பானிய தலைமையமைச்சர் HOSOKAWA MORSIHIRO ஆகியோர் இவ்விடத்தில் கொல்ப் விளையாடியுள்ளனர்.

நேயர்களே, நீங்கள் கொல்ப் விளையாட விரும்பினால், குளிர்காலத்தில் தென் சீனாவின் ஹைனான் தீவுக்கு வந்து, வெப்ப மண்டலத் தீவிலுள்ள எழில் மிக்க காட்சியைக் கண்டுகளிப்பதோடு, கொல்ப்த் திடலில் திறமையுடனும் விளையாடலாம். அல்லவா?