
மார்ச் 25ஆம் நாள், 2006ஆம் ஆண்டு சர்வதேச சதுரங்க உலக மகளிர் சாம்பியன் பட்டப் போட்டியின் இறுதிப் பந்தயத்தின் மூன்றாவது செட் ரஷியாவின் யேகாஜெலின்பாவ் நகரில் நிறைவடைந்தது. சீன வீராங்கனை சியூ யூ ஹுவா ரஷியாவின் வீராங்கனை ஜாலியாமொவாவைத் தோற்கடித்து ஒரு சுற்று முன்னதாக சாம்பியன் பட்டம் பெற்றார். சீன வீராங்கனை சியே ச்சுன், சு சென் ஆகியோரை அடுத்து இந்த பட்டத்தை பெற்ற மூன்றாம் சீன வீராங்கனை விளங்கினார்.
முதலாவது ஆட்டத்தில் ஜாலியாமொவா குறுகிய நேரத்தில் தோல்வியடைந்தார். இரண்டாம் ஆட்டத்தில் அவர் தமது பாதுகாப்பை வலுப்படுத்தி, சியூ யு ஹாவின் தாக்குதலை தவிர்க்க முயன்றார். சியூ யூ ஹுவாவும் தாம் மிகவும் தேர்ச்சி பெற்ற நிம்சோவிச் பாதுகாப்பு முறையைப் பயன்படுத்தி மிகவும் கவனமாக விளையாடினார். விரைவில் அவர் ஜாலியாமொவாவை மிகவும் கஷ்டமான நிலைக்கு நிர்ப்பந்தித்தார். இறுதியில் ஜாலியாமொவா 58வது சுற்றில் தமது வீழ்ச்சி நிலையை கண்டு வேறுவழி இல்லாமல் தோல்வியை ஏற்றுக்கொண்டார்.
மார்ச் பதினைநதாம் நாள் சுமார் பத்தாயிரம் சீனப் பார்வையாளர்கள், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உலக கோப்பைக்கான போட்டிகளின் பரிசு கோப்பையை நேரில் பார்வையிட்டனர். பெய்சிங் பல்கலைக்கழகத்தின் நூறு ஆண்டு நிறைவு நினைவு மண்டபத்தில் இந்த பரிசு கோப்பை சீனப் பொது மக்களுக்கு காண்பிக்கப்படுவது இதுவே முதல் தடவை.
அனைத்து பார்வையாளர்களும் இந்த கோப்பையுடன் படம் எடுக்கலாம். தவிரவும், பார்வையாளர்கள் உலக கோப்பை கால்பந்து பற்றிய திரைப்படங்களையும் கண்டு ரசிக்கவும் பல விளையாட்டு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவும் முடியும். சர்வதேச கால்பந்து சம்மேளனமும் கொக்கோ கோலா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பரிசு கோப்பையின் உலகப் பயணம் கடந்த ஜனவரி திங்கள் ஏழாம் நாள் கானாவில் துவங்கியது.
இந்த நடவடிக்கை இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள் பத்தாம் நாள் வரை நீடிக்கும். வழியில் அது இருபதெட்டு நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு ஊடாக செல்லும். இது பதினெட்டு காரட் தங்கத்தால் செய்யப்பட்டது. ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபதினாந்காம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இது பயன்படத் துவங்கியது. இவ்வாண்டு ஜூலை திங்கள்ஒன்பதாம் நாள் உலக கோப்பைக்கான கால்பந்து போட்டிகளின் இறுதிப் பந்தயத்தில் இது சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும்.
|