
ராஜா:கலையரசி, இந்த வருடம் வசந்த விழா விருந்துக்காக நான் பேராசிரியர் சுந்தரன் வீட்டிற்குப் போயிருந்தேன்.
கலை:அப்படியா? விருந்து பலமா?
ராஜா:ஆமா. ஜனவரி 28 அதாவது வசந்த விழாவுக்கு முந்தைய நாள் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து உண்ணும் விருந்து-நீங்க சிறப்பு விருந்தினரா வரணும்னு சுந்தரம் அழைத்தார். போனேன். வட்டமான மேஜை. சுற்றிலும் நாற்காலிகள். நடுவிலே கொஞ்சம் வித்தியாசமான ஒரு நாற்காலி. அதிலே என்னை உட்கார வைத்தார்கள். அது சீன சம்பிரதாயப்படி சிறப்பு விருந்தினருக்கு செய்யப்படும் மரியாதை என்று சுந்தரம் சொன்னார் எனக்கு வலதுபுறம் சுந்தரம், அவருடைய மகன், மருமகள், அப்புறம் இடதுபுறம் சுந்தரத்தினுடைய சம்பந்திகள் மற்றும் அவருடைய மனைவி உட்கார்ந்தனர். "இரண்டாண்டுகளுக்கு முன்பு நானும், மனைவியும், மகனும் மட்டுமே வசந்த விழா விருந்து உண்டோம். கடந்த ஆண்டில் மருமகளும், சம்பந்திகளும் சேர்ந்து கொண்டனர். இந்த ஆண்டில் நீங்களும் ஒரு குடும்ப உறுப்பினராகி விட்டீர்கள்" என்று சொல்லி சுந்தரம் மகிழ்ந்தார். அப்போது ஒருவகையான புதுமையான கஞ்சி பரிமாறினார்கள்.
கலை:ஓ, அதுவா, அதை La Ba Zhou என்பார்கள்.

ராஜா:அப்படியா? இந்த பெயருக்கு ஏதாவது சிறப்பு காரணம் உண்டா?
கலை:ஆமா..லா என்றால் டிசம்பர். பா என்றால் 8 சோ என்றால் அரிசிக்கஞ்சி. அதாவது சந்திர நாள்காட்டியின் படி 12வது மாதத்தின் 8வது நாளில், குடிக்கப்படும் கஞ்சி என்று இதற்கு அர்த்தம். இது தொடர்பாக இரண்டு கதைகள் இருக்குது. சொல்லட்டுமா?
ராஜா:முதலில் இந்தக் கஞ்சி எப்படி தயாரிப்பது? அதைச் சொல்லுங்க. கதையை அப்புறமா வச்சுக்கலாம்.

கலை:முதலில் தேவையான பொருட்களை சொல்றேன்.
புழுங்கல் அரிசி 25 கிராம்
ரப்பர் அரிசி 50 கிராம்
உடைக்காத கோதுமை தானியம் 25 கிராம்
மக்காச் சோளம் 25 கிராம்
பாசிப்பயறு 100 கிராம்
வெள்ளை தாமரைவிதை 50 கிராம்
வெள்ளை மொச்சை 50 கிராம்
ஆப்ரிகாட் விதை 25 கிராம்
வால்நட் 25 கிராம்
செஸ்ட்நட் 25 கிராம்
வேர்க்கடலை 25 கிராம்
தேன் வெல்லம் 100 கிராம்
|