• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-03-29 08:49:29    
மின்னஞ்சலில் நேயர்களின் கருத்து

cri

மின்னஞ்சலில் பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடர்பான www.beijing2008.com என்ற இணையதளம் பற்றி வளவனூர் புதுப்பாளையம் செல்வம் எழுதியிருக்கின்றார். ஒலிம்பிக் தொடர்பான 10 முக்கிய செய்திகளைத் தெரிவு செய்ய இந்த இணைய தளம் நடத்திய போட்டியில் தாமும் பங்கு கொண்டதாகவும், அதை CRI SMS NET மூலம் அறிவித்ததும் அதைக் கண்டு இகுஷ்ணகிரி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத் தலைவரும் இந்தப் போட்டியில் பங்கெடுத்தார். என்றும் செல்வம் தெரிவிக்கிறார்.

வாணி-- நேயர்கள் இவ்வாறு சுய முயற்சியில் இணையதளப் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சி தருகின்றது.

ராஜா-- மேலும், சீனாவில் கடந்த ஆண்டில் செல்லிட பேசி மூலமாக 30 ஆயிரத்து 465 கோடி குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டன என்ற செய்தி தொடர்பாக செல்வம் ஒரு தகவல் தருகின்றார். அதாவது CRI SMS NET மூலமாக கடந்த 6 திங்கள் காலத்ிதல் 1 லட்சத்து இரண்டாயிரத்து 438 குறுந்தகவல்களை3 நேயர்களுக்கு அனுப்பியதாகக் கூறுகின்றார். மேலும், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி இப்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. சீனர் ஆசிரியராகவும், தமிழ் மாணவராகவும் இருந்து பாடம் நடத்துவது பாராட்டித்தக்கது என்று செல்வம் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு நேயர்கள் மன்றங்களுக்கும் உங்கள் நிரல் நிகழ்ச்சியில் வாய்ப்பு அளிப்பதைப் பாராட்டும் இவர், நட்புப்பாலம் நிகழ்ச்சியில் சௌம்ய நாராயணன் பேட்டியில் பட்டுப்பாதை பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தன என்கிறார். மேலும் சீன இசை வழங்கும் வான்மதி பக்குவம் அடைந்தவர் போல் நிகழ்ச்சி வழங்குவதாக பாராட்டியுள்ளார்.

வாணி-- வளவனூர் புதுப்பாளையம் செல்வம் சீனா மற்றும் சீன வானொலி மீது காட்டும் ஈடுபாட்டுக்கும் ஆர்வத்துக்கும் நன்றி. நவீன தொழில் நுட்ப முன்னேற்ற்த்தை நேயர்கள் நன்கு பயன்படுத்தி, தொடர்புகளை விரிவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோம்.

ராஜா-- கண்டமங்கலம் முஜிபுர் ரஹ்மான் தம்மை செல்வம் சந்தித்து உற்சாக மூட்டியதாகவும், சீன வானொலி வழங்கிய கைக்கடிகாரத்தை தமக்கு வழங்கியதாகவும், இதனால் சீன வானொலிக்காக அதிகம் பாடுபட வேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறுகின்றார்.

வாணி-- ஊக்கம் தந்தவருக்கும், ஊக்கம் பெற்றவருக்கும் பாராட்டுக்குள். இந்த சம்பவம் ஒரு முன்னுதாரணமாகத் திகழட்டும்.

ராஜா-- மதுரை செல்லூர் சீனிவாசன் தமது மின்னட்சலில் இந்திய சீன நட்புறவு பொது அறிவுப்போட்டியில் மதுரையில் பல நேயர்கள் ஒரே நேரத்தில் பரிசு பெற்றது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அறிவியல் ஆராய்ச்சிகள் போலிகள் பற்றி விளக்கிய அறிவியல் உலகம் நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளார்.

வாணி-- நேயர் சீனிவாசன் காட்டும் அக்கறைக்கு நன்றி. இந்த நேரத்தில் ஒரு அறிவிப்பு. மதுரை மாவட்ட மீனாட்சி சீன வானொலி நேயர் மன்றம் சார்பிர் வசந்த விழாவை முன்னிட்டு நேயர்களுக்காக நடத்தப்படும். சீன-இந்திய நட்புறவு என்ற காட்டுரைப் போட்டிக்கான இறுதி நாள் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மன்றத் தலைவர் என். இராமசாமி தெரிவித்துள்ளார்.

ராஜா—பொன் ஏழிசை வல்லபி கடந்த நேயர் நேரம் நிகழ்ச்சியைப் பாராட்டுகின்றார். மேலும், நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியில் பெண்களுக்கு உதவும் பயனுள்ள குறிப்புக்களை வழங்கிய கலையரசியை பாராட்டியுள்ளார். இதே நிகழ்ச்சியைப் பாராட்டி விழுப்புரம் எஸ். பாண்டியராஜனும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத் தலைவர் எஸ். செல்வம் சீன வானொலியின் ஆங்கிலப் பிரிவினால் 36 சிறந்த நேயர்கஇளல் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டது குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். மேலும், வசந்த விழா சிறப்பு நிகழ்ச்சிகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிட்டு, வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம் கருத்துத் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட மன்றத்தின் இந்த ஆண்டின் முதலாவது கூட்டம் சீன வசந்த விழா தினமான ஜனவரி 29இல் நடைபெற்றது என்று எஸ். பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார். நேயர்களின் பொது அறிவை வளர்க்க செய்திகளில் உலகச் செய்திகளை அதிகம் வழங்க வேண்டும் என மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறுகின்றார்.

வாணி-- நேயர்களின் ஆர்வத்துக்கும் அக்கறைக்கும் நன்றி. பாராட்டுகின்றோம்.வசந்த விழாவின் போது, பகலாயூர் பி,ஏ. நாச்சிமுத்து, வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம், நந்தியாளம் சீன வானொலி நேயர் மன்றத்தின் உறுப்பினர்கள் முதலியோர் தொலைபேசி மற்றும் Fax மூலம் எங்களுக்கு விழா வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு உளமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.