
வரும் ஐந்தாண்டுகளில், சீனாவின் ஆறில் ஒருபகுதி கிராமங்களில் குறைந்தது, ஒரு கூடைப்பந்தாட்ட திடலும், 2 வெளிப்புற மேசை பந்தாட்டக்களங்களும் அமைக்கப்படும் என்று சீன தேசிய விளையாட்டுத் தலைமை ஆணையத்தின் துணை தலைவர் Feng Jian Zhong கூறியுள்ளார். இன்று பெய்சிங்கில் பேசிய அவர், இத்திட்டத்திற்கு "விவசாயிகளின் உடல் நலனுக்கான விளையாட்டு" என பெயரிடப்பட்டுள்ளது என்றார். சீனாவின் விசாலமான கிராமப்புறங்களில் சிக்கனமான சிறிய ரக பொது விளையாட்டு சாதனங்களை நிறுவி, விவசாயிகளுக்கு அருகில் விளையாட்டுத் திடல்களை கட்டி விளையாட்டுக்களை வளர்ப்பது இத்திட்டத்தில் அடங்கும் என்று Feng Jian Zhong சொன்னார்.
|