ஷாங்காய் மாநகரில் அன்னிய முதலீடு
cri
கடந்த 5 ஆண்டுகளாக, ஷாங்காய் மாநகரில் அன்னிய வணிகர்கள் செய்த மொத்த முதலீடு 5 ஆயிரத்து 450 கோடி அமெரிக்க டாலராகும். சீனப் பெருநிலப்பகுதியில் அன்னிய வணிகர்கள் செய்துள்ள முதலீட்டில் இது 10 விழுக்காடு என்று ஷாங்காய் மாநகரின் மேயர் Han Zheng கூறியுள்ளார். அண்மையில் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், 2001ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை, ஷாங்காய் மாநகரில் அன்னிய வணிகர்கள் முதலீடு செய்த திட்டப்பணிகளின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 5 ஆயிரத்து 450 கோடி அமெரிக்க டாலர் அன்னிய முதலீடு வந்தது. இதனால் அன்னிய வணிகர்கள் ஷாங்காயில் செய்த முதலீடு ஒரு மடங்கு அதிகரித்தது என்றார். ஷாங்காய் மாநகரின் கார், நிதி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீடு வேகமாக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். தற்போது, ஷாங்காய் மாநகரில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான அன்னிய நிறுவனங்கள் இயங்குகின்றன.
|
|