சீனாவின் மிகப் பெரிய பெட்ரோ ரசாயன கூட்டு முதலீட்டு திட்டப்பணியாக Zhonghai Shell தென் சீன கடல் எண்ணெய் ரசாயன திட்டப்பணி இன்று குவாங் துங் மாநிலத்தின் Hui Zhou நகரில் அதிகாரப்பூர்வமாக உற்பத்தியில் இறங்கியது. உலக நிலையிலான இத்திட்டப்பணியில் மொத்தம் 400 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ராயல் டட்ச் Shell நிறுவனம் 50 விழுக்காடு பங்குகளை வைத்துள்ளது. ஆண்டுதோறும் 23 லட்சம் டன் ரசாயனப் பொருட்களை, தென் கிழக்கு சீனாவின் கடலோரப் பகுதிகளுக்கு இந்த ஆலை விநியோகிக்கும். ஒரு பகுதி பொருட்கள், வெளிநாட்டுச் சந்தைக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
|