
2006 ஆம் ஆண்டு ஸ்னூகர் சீன ஒப்பன் போட்டி மார்ச் 26ஆம் நாள் பெய்சிங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இறுதி ஆட்டத்தில் மார்க் வீலியம்ஸ் 9-8 என்ற செட் கணக்கில் சிங்கிஸைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். நான் ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக சாம்பியன் பட்டம் பெறவில்லை. இந்த முறை நான் நுணுக்கமாக தயாரித்தேன், நான் மிகவும் முன்னதாக சீனா வந்து பயிற்சி செய்தேன். இந்தப் போட்டியில் நான் பெரும் கவனம் செலுத்தினேன். பார்வையாளர்களின் ஆதரவு இந்த போட்டியில் நான் வெற்றி பெற்றதன் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இன்று நான் நல்ல நிலையில் இருந்தேன், பல வாய்ப்புகள் மிக முக்கியமானது. அப்போது எனக்கும் சிக்கின்ஸுக்கும் வாய்ப்புகள் உண்டு. இறுதியில் நான் வெற்றி பெற்றேன். நான் நாடு திரும்பிய பின், உலக சாம்பியன் பட்டப் போட்டிக்காக தயாரிப்பேன். இன்றைய வெற்றி எனக்கு பெரும் நம்பிக்கை தந்துள்ளது. உலக சாம்பியன் பட்டப் போட்யில் நான் மேலும் நம்பிக்கையுடன் மேலும் சிறந்த சாதனை பெற பாடுபடுவேன் என்று மார்க் விலியம்ஸ் மகிழ்ச்சியுடன் கூறினார்.

2006ஆம் ஆண்டு சர்வதேச நீர் குதிப்பு பெரும் பரிசு போட்டியின் மாட்ரீட் சுற்று மார்ச் பத்தொன்பதாம் நாள் நிறைவடைந்தது. சீனாவின் புகழ்பெற்ற வீராங்கனை கோ சிங் சிங், வீரர் ஹு ச்சியா கலந்துகொள்ளாத போதிலும் சீன அணி பத்து நிகழ்ச்சிகளில் ஐந்து தங்கப் பதக்கங்களை பெற்றது. லீ ஷிசின் ஆடவருக்கான ஒரு மீட்டர் பாய்ச்சல் பலகை குதிப்பிலும், வூ மின்சியா மகளிருக்கான ஒரு மீட்டர் பாய்ச்சல் பலகை குதிப்பிலும் சாம்பியன் பட்டம் பெற்றனர். லீ ஷிசின் ஆடவருக்கான மூன்று மீட்டர் பாய்ச்சல் பலகை குதிப்பிலும் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவருக்கான மூன்று மீட்டர் பாய்ச்சல் பலகை இரட்டையர் நீர் குதிப்பில் சீன வீரர்களான தாங் சௌ யுன், சின் கை ஜோடி சாம்பியன் பட்டம் பெற்றது. ஆடவருக்கான பத்து மீட்டர் மேடை இரட்டையர் நீர் குதிப்பில் சீன வீரர்களான வாங் லியங், சாங் சிங் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
கால்பந்து பரிசு கோப்பை மார்ச் பதினைந்தாம் நாள் சுமார் பத்தாயிரம் சீனப் பார்வையாளர்கள், சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் உலக கோப்பைக்கான போட்டிகளின் பரிசு கோப்பையை நேரில் பார்வையிட்டனர். பெய்சிங் பல்கலைக்கழகத்தின் நூறு ஆண்டு நிறைவு நினைவு மண்டபத்தில் இந்த பரிசு கோப்பை சீனப் பொது மக்களுக்கு காண்பிக்கப்படுவது இதுவே முதல் தடவை. அனைத்து பார்வையாளர்களும் இந்த கோப்பையுடன் படம் எடுக்கலாம்.
தவிரவும், பார்வையாளர்கள் உலக கோப்பை கால்பந்து பற்றிய திரைப்படங்களையும் கண்டு ரசிக்கவும் பல விளையாட்டு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவும் முடியும். சர்வதேச கால்பந்து சம்மேளனமும் கொக்கோ கோலா நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த பரிசு கோப்பையின் உலகப் பயணம் கடந்த ஜனவரி திங்கள் 7 ஆம் நாள் கானாவில் துவங்கியது. இந்த நடவடிக்கை இவ்வாண்டின் ஏப்ரல் திங்கள் 10ஆம் நாள் வரை நீடிக்கும்.
|