
பெய்சிங் ஒலிம்பிக் பூங்காவில் டென்னிஸ் மையத்தின் கட்டுமானப் பணி மார்ச் 23ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது. ஒலிம்பிக் தேவைகளுக்கு ஏற்ப, 16.68 ஹெக்டர் நிலப்பரப்பில் கட்டப்படும். இந்த மையத்தில் பத்து போட்டிக் களங்களும் 6 பயிற்சிக் களங்களும் இருக்கும். மொத்தம் 17400 இருக்கைகளைக் கொண்ட இந்த மையத்தில் பெய்சிங் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளும் பெய்சிங் ஊனமுற்றோர் ஒலிம்பிக் சக்கரமுள்ள நாற்காலி டென்னிஸ் போட்டிகளும் நடைபெறும்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் துணைத் தலைவர் ஹயாது தலைமையில் ஆய்வுக் குழு ஒன்று, மார்ச் 21, 22 ஆகிய நாட்களில் 2008 பெய்சிங் ஒலிம்பிக் கால்பந்து போட்டிகளுக்கான ஆயத்தப் பணியை மதிப்பிட்டது. பெய்சிங்கின் ஆயத்தப் பணிகள் தமக்கு மிகவும் மனநிறைவு தருவதாகவும், 2008 ஒலிம்பிக் கால்பந்து போட்டிகள் மிகவும் சிறந்த நிலையில் நடைபெறும் என்று தாம் நம்புவதாகவும், மதிப்பீட்டுக்குப் பின் ஹயாது தெரிவித்தார்.
பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டித் தலைவர் லியூ ச்சி மார்ச் 24ஆம் நாள் பெய்சிங் வந்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் கௌரவத் தலைவர் JUAN ANTONIO SAMARANCH ஐச் சந்தித்துப் பேசினார். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்தம் வாய்ப்பை பெய்சிங் பெறுவதற்கும், இயக்கத்தை சீனாவில் பரப்புவதிலும் சமரான்ச் ஆற்றிய தலைசிறந்த பங்கினை லியூ ச்சி பாராட்டினார். மார்ச் 21, 22 நாட்களில் சீனாவின் ஷாங்கை மாநகரில் நடைபெற்ற மூன்றாவது சீன-ஸ்பெயின் கருத்தரங்கில் அவர் கலந்துகொண்ட சமராஞ்ச், 23ஆம் நாள் பெய்சிங் வந்து பல விளையாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கெடுத்தார்.
சர்வதேச சதுரங்கம் 2006ஆம் ஆண்டு உலக மகளிருக்கான சர்வதேச சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டி மார்ச் 25ஆம் நாள் ரஷியாவின் EKATERINBURG நகரில் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சியு யூ ஹுவா இரண்டு வெற்றி ஒரு சமன் என்ற சாதனையுடன் ரஷியாவின் ஜாலிமொயாவாவைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். சியே சுன், சு சென் ஆகிய இருவரை அடுத்து அவர் இந்த பட்டத்தை பெற்ற மூன்றாவது சீன வீராங்கனை ஆவார். மார்ச் பத்தாம் நாள் துவங்கிய இந்த போட்டியில் மொத்தம் 8 சீன வீராங்கனைகளை கலந்துகொண்டனர்.
|