• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-04-03 17:38:59    
டிஜிட்டல் தொலைகாட்சி சேவை

cri

டிஜிட்டல் தொலைகாட்சி பற்றி பேசும் போது, தெளிவான படக்காட்சியும், வண்ண வண்ண தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் பொதுவாக நினைவுக்கு வருகின்றன. உண்மையில், டிஜிட்டல் தொலைகாட்சி, பெருமளவில் தகவல் சேவைகளை வழங்க முடியும். தற்போது, டிஜிட்டல் தொலைகாட்சியைப் பயன்படுத்தி, காரையும் வீட்டையும் வாங்குவது, மருத்துவரைப் பார்ப்பது, பங்குகளை வாங்குவது போன்றவற்றில், சீனாவின் வணிகர்களும் வசதிபடைத்த மக்களும் ஈடுபட்டு, மக்களின் வாழ்க்கையில் வசதிகள் அதிகரித்துள்ளன.

77 வயதான வாங் ச்சின் புஃ, சீன சேசியாங் மாநிலத்தின் ஹாங்சேள நகரில் வசிப்பவர். ஒரு ஆண்டுக்கு முன், டிஜிட்டல் தொலைகாட்சி அவருடைய வீட்டில் நுழைந்தது. டிஜிட்டல் தொலைகாட்சியில் காணும் தகவல் மூலம் தமக்கு விருப்பமான வாங்குவது எளிதாக உள்ளது என்று அவரும் அவருடைய மனைவியும் வியப்புடன் கூறுகின்றனர்.

டிஜிட்டல் தொலைகாட்சியில், காட்டப்படும் நூல் பட்டியலைப் பார்த்து, வாங்குவது மிகவும் வசதியாக உள்ளது.

வாங்ச்சின்புஃ போன்ற முதியோர்களுக்கு சேவை வழங்குவதோடு, வேலை செய்யும் இளைஞர்களுக்கும் வசதியை தருகிறது. டிஜிட்டல் தொலைகாட்சி இருப்பதால், அரிசி, உணவு எண்ணெய் வாங்குவதில், தமது நேரத்தை அதிகமாக செலவிட வேண்டியதில்லை என்று ஹாங்சேள நகரவாசி சென்ஹுன் தெரிவித்தார். தொலைகாட்சி மூலம் பொருட்களின் வகை மற்றும் அளவை உறுதிப்படுத்திய முப்பது நிமிடத்துக்குள் பொருட்கள் வீட்டுக்கு வந்து சேர்கின்றன. இவ்வாறு பொருட்களை கொண்டு வந்து வீட்டில் சேர்க்கும் சேவை வணிகர் ஜின் ஜியாங் எமது செய்தியாளரிடம் பேசுகையில், டிஜிட்டல் தொலைகாட்சியின் பொருள் வாங்கல் தகவல் சேவையினால், நிதானமான தொகை வாடிகையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்றார்.

தற்போது, சுமார் 20 ஆயிரம் அல்லது 30 ஆயிரம் மக்கள், டிஜிட்டல் தொலைகாட்சி மூலம், எங்களின் நீண்டகால வாடிகையாளர்களாக மாறியுள்ளனர். அவர்களுடைய ஒரு திங்களுக்கு தனிநபர் நுகர்வு, நூறு முதல் முன்னூறுயுவானாகும் என்றார் அவர்.

ஹாங்சேள டிஜிட்டல் தொலைகாட்சி தொழில் நிறுவனத்தின் தலைமை இயக்குநரின் உதவியாளர் தாங் யூ அம்மையார் கூறியதாவது:

இந்த டிஜிட்டல் தொலைகாட்சி மூலம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தவிர, பயன்படுத்தவும் முடிகிறது. இதில், வாழ்க்கை, கல்வி, நிதி, விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட சேவைத் தகவல்கள் தரப்படுகின்றன. நாள்தோறும், இந்தத் தகவல்கள் சுமார் 87 பேர் பயன்படுத்துகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, சீனாவில் தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பிலும், ஒளிபரப்பிலும் டிஜிட்டல் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் தொலைகாட்சியின் மேம்பாடு பற்றி குறிப்பிடுகையில், அதன் ஒளிபரப்பு வீச்சு, மேலும் விரிவானதாகவும், காட்சியின் தரம் மேலும் நன்றாகவும் இருக்கின்றது என்று ஹாங்சேள நகரத்தின் டிஜிட்டல் தொலைகாட்சி தொழில் நிறுவனத்தின் துணை தலைவர் சேங் சியேள லின் கூறினார்.

டிஜிட்டல் தொலைகாட்சி மூலம், தகவல்களைச் சேமித்து வைத்து, பின்னர் பயன்படுத்த முடியும். இதனால், மக்கள், முந்திய தொலைகாட்சி நிகழ்ச்சிகளைத் தேடிப் பார்த்து, அந்தத் தகவலை தொலைக்காட்சி மூலம் மற்றவர்களுடன் பரிமாற முடியும். அதாவது, தொலைகாட்சியை, ஒரு எளிய கணிணியைப் போன்று பயன்படுத்தலாம்.

தற்போது, சீனாவில், 50 நகரங்களிலும், டிஜிட்டல் தொலைகாட்சி பயன்படுத்தப்படுகிறது. தொலைகாட்சிப் பெட்டி, சீனாவில் மிகவும் பரவலாகப் பயன்படும் சாதனமாக இருப்பதால், டிஜிட்டல் தொலைகாட்சிக்கு நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளது. அதன் தகவல் சேவை, நகரவாசிகளின் வாழ்க்கைக்குத் துணைபுரியும் என்றும் சேங் சியேள லின் கூறினார்.