 சுவிட்சர்லாந்து நாட்டில் தனிநபர் வருமானம் முப்பதாயிரம் அமெரி்க்க டாலராகும். அது உலகில் மிகவும் செல்வந்த நாடுகளில் ஒன்றாகும். இங்குள்ள மலைகள் அதன் சிறப்பு வரலாற்றுப் பண்பாட்டுப்பின்னணி ஆகியவை, அவர்களுக்கு அயராதுழைப்பது, எளிய வாழ்க்கை நடத்துவது, காலம் தவறாமல் வருவது முதலிய நன்குணங்களை விளைவித்துள்ளன.
எளிய வாழ்க்கை
சுவிட்சர்லாந்து மக்கள் ஒரு சல்லி காசு கூட வீணாக்காமல் எளிய வாழ்க்கை நடத்துகிறார்கள். இங்குள்ள மக்கள், தமது பணத்தை சுற்றுலா செல்வது, உடற்பயிற்சி செய்வது, நாடகம் கண்டு ரசிப்பது அருங்காட்சியகங்களைப் பார்வையிடுவது ஆகியவற்றுக்கு செலவழிக்க விரும்புகின்றனர். உணவு உடை முதலிய துறைகளில் அவர்கள் அதிக அக்கறை கொள்ள வில்லை. வீடுகளிலோ உணவகங்களிலோ அவர்கள் உணவுப்பொருட்களை வீணாக்காமல் எல்லாம் சாப்பிட்டு முடிப்பார்கள். வீதிகளில் அலைந்த திரியும் போது சாதாரண ஆடைகளை அணியும் இளைஞர்களையும் முதியோர்கலையும் இகழ்ந்து நோக்க கூடாது. அவர்கள் ஒரு வேளை லட்சாதிபதிகள் அல்லது கோடீஸ்வரர்களாக இருக்கக் கூடும். பெரும்பாலான சுவிட்சர்லாந்து மக்கள் எளிய இயல்பான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

அயராதுழைப்பது
இங்குள்ள மக்கள் வாரந்தோறும் நாற்பதிரண்டு மணிநேரம் பணி புரிய வேண்டும். ஆண்டுதோறும் பணியாளர்களுக்கு இருப்பது நாட்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுமுறை. இது இதர ஐரோப்பிய நாடுகளை விட குறைவு. நீங்கள் அயராதுழைப்பவர் என்பது, மிகவும் சிறந்த பாராட்டாகும். நிறுவனங்களில் சாதாரண ஊழியர்கள் மட்டுமல்ல, மேலாளர்களும் தலைமை மேலாளர்களும் அயராதுழைக்கிறார்கள்.
காலம் தவறாமல் வருவது
இதுவும் சுவிட்சர்லாந்து மக்களின் புகழ்பெற்ற தனிச்சிறப்பியல்பு ஆகும். இந்நாட்டுக்கு வருகை தந்த யாவரும் இங்குள்ள காலம் தவறாமல் வரும் வசதியான பொது போக்குவரத்து அமைப்புகளைப் பாராட்டுகின்றனர். இங்குள்ள ரயில் வண்டிகளும் பேருந்துகளும் அனைத்தும் காலம் தவறாமல் வருகின்றன. சாலை விபத்து இல்லாத நிலைமையில் சரியான நேரத்தில் அவை புறப்படும்.
இந்நாட்டில் உள்ள சிக்கலான சட்ட விதிகள், இங்கு வருகை தரும் அந்நியருக்கு எளிதில் புரியாது. எடுத்துக்காட்டாக, இரவு பத்து மணிக்குப் பின் பெரும் இரைச்சல் போட கூடாது. யாரோ வானொலி பெட்டியின் சத்தம் பெருக்கினால் அயல் வீட்டுக்காரர் உங்கள் கதவைத் தட்டி நினைவு படுத்துவர். இங்கு பொதுவாக இரவு 10 மணிக்குப் பின் மக்கள் குளிக்க மாட்டார்கள். 9 மணிக்குப் பின், மற்றவருக்கு தொல்லை கொடுக்காமல் தவிர்க்கும் பொருட்டு, மற்றவருக்கு தொலைபேசி பண்ண மாட்டார்கள்.
|