சீனாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள Si Chuan மாநிலத்தில் Pu Guang இயற்கை வாயு வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சீனாவின் மிக பெரிய பகுக்கப்படாத இயற்கை வாயு வயல் என்று சீன பெட்ரோ ரசாயன நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. Pu Guang இயற்கை வாயு வயலில் 25 ஆயிரம் கோடி கன மீட்டர் வாயுப் படிவுகள் உள்ளன. இதை வர்த்தக ரீதியில் பயன்படுத்த முடியும். இதற்கான பூர்வாங்கப் பணிகளை தொடங்க சீன பெட்ரோ ரசாயன நிறுவனத்திற்கு சீன அரசு அனுமதி அளித்துள்ளது. Pu Guang இயற்கை வாயு வயல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சீனாவில் எண்ணெய் மற்றும் இயற்கை வாயு பற்றாக்குறையைத் தீர்க்க ஆக்கப்பூர்வமாக உதவும் என்று கூறப்படுகிறது.
|